• India
```

இந்தியர்கள் பயன்படுத்தும் 72% மொபைல்கள் பாதுகாப்பற்றது..சைபர் பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை..!

Android Vulnerability Alert

By Ramesh

Published on:  2024-11-11 20:26:30  |    211

72% Of Indian Smartphones Are Vulnerable To Security Threats - இந்தியர்கள் தற்போது பயன்படுத்திக் கொண்டு இருக்கும் 72 சதவிகித ஸ்மார்ட் போன்கள் பாதுகாப்பற்றது தான் என கம்ப்யூட்டர் எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ் டீம் எச்சரித்து இருக்கிறது.

72% Of Indian Smartphones Are Vulnerable To Security Threats - சைபர் பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டு வரும் கம்ப்யூட்டர் எமர்ஜன்ஸி ரெஸ்பான்ஸ் டீம் (CERT) இந்தியர்களுக்கு ஒரு புது எச்சரிக்கை ஒன்றை விடுத்து இருக்கிறது, அதாவது இந்தியர்கள் பயன்படுத்தும் 72 சதவிகித ஸ்மார்ட் போன்கள் ஆனது பாதுகாப்பற்றது மற்றும் எளிதில் ஹேக் செய்யக்கூடியது என ஒரு CERT ஏஜென்ஸி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

Android 11 க்கு அப்புறம் வந்த Android 12, Android 12L, Android 13 மற்றும் Android 14 என அனைத்து இயங்கு தளங்களும் ஹேக்கர்களால் எளிதில் ஹேக் செய்ய கூடிய வகையில் இருப்பதாக இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்ஸி ரெஸ்பான்ஸ் டீம் எச்சரித்து இருக்கிறது, பொதுவாக தற்போது வெளியாகும் பெரும்பாலான போன்கள் இந்த இயங்கு தளத்தில் தான் இயங்கி வருகின்றன.



ஒட்டு மொத்தமாக கிட்டதட்ட 72% பயனாளர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்கள் குறித்து எச்சரிக்கை வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது, ஒட்டு மொத்தமாக அத்தனை மொபைல்களையும் திரும்ப பெறுவது என்பது சாத்தியமில்லாதது, ஆதலால் அத்தகைய இயங்குதளங்களை கொண்ட ஸ்மார்ட் போன்களை பயனர்கள் பாதுகாப்பாக பயன்படுத்தும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

இனிமேல் பயனர்கள் புதிய ஸ்மார்ட் போன்கள் வாங்கும் போது அதில் இருக்கும் கேமரா, மெமோரி, பிராசசர்கள் உள்ளிட்டவைகளை பார்த்து வாங்குவது மட்டும் அல்லாமல் அந்த ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானதா என்பதையும் அறிந்து கொண்டு வாங்க வேண்டும், தகவல் என்பது மிக முக்கிய கருப்பொருளாக இருப்பதால் போன்களின் Feature களை பார்க்காமல் Security களையும் பார்க்க வேண்டும் என CERT அறிவுறுத்தி இருக்கிறது.