Open AI AGI Coming Soon - பொதுவாக மனிதன் என்பது பல்வேறு எமோசன்களுக்கு உட்பட்டவன், அதே சமயத்தில் இயந்திரமோ, டிஜிட்டல் கருவிகளோ, செயற்கை நுண்ணறிவோ அத்தகைய எமோசன்களுக்கு அப்பாற்பட்டவை, அது போல ஒரு மனிதன் வீணாக்கும் நேரங்களை எல்லாம், தற்போது நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவின் மூலம் பொக்கிஷங்களாக மாற்றி வந்து கொண்டு இருக்கின்றன.
செயற்கை நுண்ணறிவை வடிவமைப்பதற்கு என்றே தற்போது Open AI, Alphabet, Anthropic என பல நுண்ணறிவு நிறுவனங்கள் வந்து விட்டன, கூகுள், அமேசான் போன்ற நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான செயற்கை நுண்ணறிவு சாதனங்களை தாங்களே தயாரித்துக் கொள்கின்றன, கூகுள் நிறுவனம் ஏற்கனவே தங்களது செயல்பாட்டில் 25% செயல்பாடுகளை செய்ற்கை நுண்ணறிவின் கீழ் கொண்டு வந்து விட்டது.
இந்த நிலையில் தான் Open AI நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சாம் ஆல்ட்மேன், இந்த ஆண்டே மனிதர்களை போல செயல்படும், AI ஏஜென்டான AGI (Artificial General Intelligence) யை வெகு விரைவில் வெளியிடுவோம் என அறிவித்து இருக்கிறார், சேவை, நிறுவன செயல்பாடுகள், தயாரிப்புகள் என பல துறைகளில் மனிதர்களை போலவே செயல்படும் இந்த ஏஜென்ட் AGI யை பயன்படுத்த முடியுமாம்.
சிந்தித்து செயல்படும் திறன் மனிதர்களுக்கு மட்டுமே இருந்தாலும், கூடவே மனிதன் அழுத்தத்திற்கும், சோர்வுக்கும் உட்படுவான், ஆனால் ஒரு வேலையை ஓய்வில்லாமல், தடை இல்லாமல், தவறுகள் இல்லாமல் செய்ய செயற்கை நுண்ணறிவால் செய்ய முடியும் என நிறுவனங்கள் நம்புகின்றன, நிச்சயம் இந்த AGI தொழில்நுட்ப செக்டாரில் மட்டும் அல்லாது பல துறைகளில் வேலை இழப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
" சும்மாவே இலாப நோக்கங்களுக்காக ஊழியர்களை வேலை இழப்பு செய்யும் நிறுவனங்கள், இந்த எஜென்ட் AGI வந்து விட்டால் என்ன செய்ய காத்திருக்கிறதோ, என ஊழியர்கள் அச்சத்தில் இருக்கின்றனர் "