OnePlus Nord CE4 Lite 5G - பிரபல OnePlus நிறுவனம் வெளியிட்டு இருக்கும் OnePlus Nord CE4 யின் தரவரைவுகள் குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.
2013 யில் கார்ல் பெய், பீட் லே என்ற இருவரால் ஆரம்பிக்கப்பட்ட சீன நிறுவனமான One Plus, சீனாவை மையமாக கொண்டு மின்னனு பொருட்களை தயாரித்து, உலகளாவிய அளவில் தங்களது பொருள்களை சந்தைப்படுத்தி வருகிறது, வருடத்திற்கு வருடம் ஏதாவது வித்தியாசம் காட்டி கொண்டே இருப்பது தான் இந்த ஒன் பிளஸ் நிறுவனத்தின் ஆகச்சிறந்த பலம்,
சமீபத்தில் சில வருடங்களாக ஒன் பிளஸ் OS யில் ஏற்பட்ட பிரச்சினைகளால், வாடிக்கையாளர்கள் ஒன் பிளஸ் என்றாலே பயந்தனர், ஆனால் தற்போது அந்த பிரச்சினைகளை எல்லாம் களைந்து, தற்போது மீண்டும் புதிய பயணத்தில் புத்துணர்வுடன் புதிய மாடலுடன் களம் இறங்கி இருக்கிறது ஒன் பிளஸ் நிறுவனம், அந்த வகையில் பல புது புது மாடல்களை ஒன் பிளஸ் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் OnePlus நிறுவனம் வெளியிட்டு இருக்கும் OnePlus Nord CE4 Lite 5G குறித்த தரவுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்
மெமோரி: 8GB RAM + 128GB ROM | 8GB RAM + 256GB ROM
ஸ்க்ரீன்: 6.67 inch + 120Hz Refresh Rate + Amoled
இயங்குதளம்: OxygenOS 14
ரிசொல்யூசன்: 2400 x1080 Pixels
கேமரா: 50MP + 2MP Back Camera | 16MP Front Camera
பேட்டரி: 5500 mAh Battery + 80W Fast Charging Support
பிராசசர்: Snapdragon 695
GPU: Adreno™ 619
விலை: 8GB RAM + 128GB ROM - 17,998 RS | 8GB RAM + 256GB ROM - 20,998 RS
கிடைக்கும் தளம்: Amazon, OnePlus Official
" பட்ஜெட் 20,000 ரூபாய் பக்காவா ஒரு மொபைல் வாங்கனும்னு நினைக்கிறவங்க கண்டிப்பா இந்த மொபைல்க்கு போகலாம் "