• India
```

ஒரு சார்ஜ்க்கு 200 கி.மீ வரை பயணம், ஓலா நிறுவனத்தின் அசத்தலான சூப்பர் பைக்!

Ola Electric Roadster X 4.5 kWh Specifications

By Ramesh

Published on:  2024-10-25 10:00:33  |    1339

Ola Electric Roadster X 4.5 kWh Specifications - ஓரு முறை சார்ஜ் செய்தால் போதும், நிற்காமல் 200 கி.மீ வரை பயணம் செய்யும் வகையில் ஓலா நிறுவனம் வெளியிட்டு இருக்கும் பசுமை பைக் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Ola Electric Roadster X 4.5 kWh Specifications  - நாளுக்கு நாள் பசுமை பைக்குகளின் உபயோகம் என்பது வாடிக்கையாளர்களிடையே பெருகி வருகிறது, அந்த வகையில் இந்தியாவில் பசுமை பைக்குகள் தயாரிப்பில் முன்னனி நிறுவனமாக விளங்கி வருகிறது ஓலா, புது புது மாடல்களில், புது புது டிசைன்களில், பல அட்வான்ஸ்டு சிஸ்டங்களையும் ஓலா நிறுவனம் புகுத்தி வருகிறது, நாடு முழுவதும் அதிகப்படியான பசுமை பைக்குகளை விற்கும் நிறுவனங்களுள் முன்னனி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது ஓலா, 

இந்த நிலையில் ஓலா நிறுவனம் Ola Roadster X 4.5 Kwh என்ற புதிய எலக்ட்ரிக் பைக் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது, இந்த பைக் எலக்ட்ரிக் பைக்குகளுள் ஒரு சூப்பர் பைக்காக அறியப்படுகிறது, ஒரே ஒரு சார்ஜில் 200 கி.மீ வரை பயணம் செய்யக்கூடியது, டாப் ஸ்பீடு 124 கி.மீ, பேட்டரி சார்ஜ் ஆக 5.9 மணி நேரம் வரை ஆகக்கூடும், ஸ்போர்ட்ஸ், நார்மல், எகானமி போன்று மூன்று மோட்களை கொண்டு இயங்குகிறது,



பேட்டரிக்கு 8 வருடம் வரை வாரண்டி கொடுக்கப்படுகிறது, அட்வான்ஸ் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) அதாவது முன்னாடி செல்லும் கார்கள் இடிக்கும்படி சென்றால் டிரைவருக்கு வார்னிங் கொடுக்கும் சிஸ்டம் இந்த பைக்கில் இருக்கிறது, ABS வசதி கொண்டு இயங்குகிறது, 2.8 செகண்டில் 0-40 கி.மீ வரை பயணிக்க கூடியது, கிட்டதட்ட ஒரு ரேசிங் பைக் கொண்டு இருக்கும் அத்துனை வசதிகளையும் கொண்டு இருக்கிறது.


" தற்போதைக்கு பைக்கின் விலை ரூ 99,999 என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது, ரிஜிஸ்ட்ரேசன் எல்லாம் தனி, ரேஸ் பைக்குகளை போல ஒரு எலக்ட்ரிக் பைக்குகளை விரும்பும் பயனாளர்களுக்கு இந்த பைக் ஒரு பெஸ்ட் அனுபவமாக இருக்கும் "