New Ration Card Apply Online Tamil Nadu -ரேஷன் கார்டுகளுக்கு மாற்றாக இப்போது ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படுகின்றன, இவற்றை ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்க முடிகிறது.
New Ration Card Apply Online Tamil Nadu -ரேஷன் கார்டுகளுக்கு மாறுதலாக நம் நாட்டில் இப்பொழுது ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படுகின்றன. முன்பு இதை விண்ணப்பிக்க அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இப்பொழுதுள்ள இந்தியா டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி ஓடி கொண்டிருக்கிறது. பெரும்பாலான சட்ட மற்றும் அரசாங்க ஆவணங்களை ஆன்லைன் வழியாக வீட்டிலிருந்தபடியே விண்ணப்பிக்கலாம். அதேபோல ஸ்மார்ட் கார்டுகளையும் வீட்டிலிருந்தபடியே விண்ணப்பிக்க முடியும். இந்தப் பதிவில் ஸ்மார்ட் கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்பதைப் தெரிந்துகொள்ளலாம்.
ஸ்மார்ட் ரேஷன்: ஸ்மார்ட் ரேஷன் கார்டு என்பது நியாய விலைக் கடைகளில் குறைந்த விலையில் பொருட்களை வாங்குவதற்காக பயன்படுத்தப்படும் அரசாங்க பதிவாகும். இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளின் மின்பதிப்பையும் நீங்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதன் மூலம் ரேஷன் கடைகளிலிருந்து பொருட்களை வாங்க ஸ்மார்ட் கார்டுகளை எடுத்துச் செல்வதற்கு பதிலாக மின்பதிப்பை காட்டி பொருட்களை வாங்கலாம். நியாயவிலைக் கடைகளில் சர்க்கரை, எண்ணெய், மண்ணெண்ணெய், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை அரசு குறைந்த மானிய விலையில் வழங்குகிறது.
ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பதற்கான தகுதி:
தமிழ்நாட்டில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்க கீழ்க்காணும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்:
1. முதலில் நீங்கள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
2. உங்கள் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2 லட்ச ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடாது.
3. உங்கள் பெயரில் சொந்த வாகனம் அல்லது சொத்து எதுவும் இருக்கக் கூடாது.
4. அரசு வேலையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் யாரும் ரேஷன் கார்டு பெற தகுதியானவர்கள் கிடையாது.
ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பது எவ்வாறு?: ஆன்லைனில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்க, நீங்கள் கீழ்க்காணும் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்:
1. முதலில் அதிகாரப்பூர்வ TNPDS இணையதளத்தைப் பார்வையிட வேண்டும்.
2. அதன்பின் ஸ்மார்ட் கார்டு விண்ணப்பம் பட்டனை அழுத்த வேண்டும்.
3. நீங்கள் புதிதாக நுழைபவராக இருந்தால் போர்ட்டலில் உங்களுடைய பதிவு செயல் முறைகளை முடிக்க வேண்டும்.
4. விண்ணப்ப படிவத்தில், அத்யாவசியமான தகவல்களைத் சரியாக நிரப்பவும்.
5. பின்னர் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவேண்டும்..
6. குடும்ப உறுப்பினர்கள், எரிவாயு இணைப்பு பற்றிய விவரங்களையும் சேர்க்கவேண்டும்.
இந்த செயல்முறை முடிந்ததும் உங்களுக்கு ஒரு குறிப்பு எண் வழங்கப்படும். இந்த எண்ணை பின் வரும் கால த்திற்காக பாதுகாப்பாக வைத்திருங்கள். ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் பெறுவதற்கு எந்தவித கட்டணமும் கிடையாது என்பது முக்கிய தகவல்.