Meta Facing Internal Leaks - சமீபத்தில் மெட்டா நிறுவனத்திற்குள் ஊழியர்கள் பேசிக் கொண்ட தகவல்கள் எடுத்த முடிவுகள் அனைத்தும் பொது வெளியில் லீக் ஆகி இருப்பது மார்க் சூக்கர்பெர்க்கை காட்டத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
பொதுவாக பெரிய பெரிய நிறுவனங்கள் தங்களது இன்டர்னல் தகவல்களை பாதுகாப்பதில் அதிக முக்கியத்துவம் காட்டுவர், காரணம் அது தான் நிறுவனத்தின் எதிர்காலத்தை உறுதி செய்ய போகும் முக்கிய கருவியாக அவர்கள் பார்க்கிறார்கள், அந்த வகையில் ஒவ்வொரு நிறுவனத்திலும் அதற்கென்று தனியாக செக்யூரிட்டி ஆபிசர் என்றதொருவர் மூலம் தகவல்கள் பாதுகாக்கப்படும்.
அவரின் வேலையே நிறுவனத்தின் கான்பிடன்சியல் ஆன தகவல்களை நிறுவனத்தை தாண்டி கசிய விடாமல் இருப்பது தான், உதாரணத்திற்கு டெஸ்லா ஒரு புதுவகையான காரை வடிவமைக்கும் ஐடியா குறித்து இன்டர்னல் மீட்டிங்கில் பேசி இருக்கிறது என்றால் அந்த தகவல் வேறு ஒரு நிறுவனத்திற்கு கசிந்தாலோ, அல்லது கார் வெளியாகும் முன்பே கசிந்தாலோ அந்த காரை டெஸ்லா உருவாக்கி பயனில்லை.
அதனால் தான் நிறுவனங்கள் தங்களது இன்டர்னல் மீட்டிங் தகவல்களை பாதுகாக்க அவ்வளவு முன்னெடுப்புகள் எடுக்கின்றன, ஆனால் தற்போது தொடர்ச்சியாக மெட்டா நிறுவனத்தின் இன்டர்னல் மீட்டிங் தகவல்களும், இன்டர்னல் மீட்டிங் முடிவுகளும் கசிந்து வருவதால் மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சரியான கோபத்தில் இருக்கிறார்.
இந்த விடயம் குறித்து மெட்டா நிறுவனத்தின் தலைமை செக்யூரிட்டி அலுவலர் ஹேய் ரோஷன் கூறுகையில், 'தகவல் கசிவு வருத்தம் அளிக்கிறது, இது குறித்து விசாரிக்கப்பட்டு, யார் இதை செய்கிறார்கள் என தெரிய வரும் பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மட்டும் அல்லாது, நிறுவனத்தை விட்டு மொத்தமாக வெளியேற்றப்படுவார்கள்' என எச்சரித்து இருக்கிறார்.