Maruti Suzuki Dzire Complete Details - மாருதி சுசுகி நிறுவனம் டிசையர் எனப்படும் நியூ ரிலீஸ் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது, அந்த கார் குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.
Maruti Suzuki Dzire Complete Details - மாருதி எனப்படும் இந்திய நிறுவனமும் சுசுகி என்ற ஜப்பானிய நிறுவனமும் இணைந்து உருவான ஒரு நிறுவனம் தான் இந்த மாருதி சுசுகி, இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக மாருதி சுசுகி அறியப்படுகிறது, முக்கியமாக சிறிய இலகுரக கார்களை தயாரிப்பதில் மாருதி சுசுகி முன்னனி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது, தலைநகர் டெல்லியை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
வருடத்திற்கு கிட்டதட்ட 22 இலட்சம் கார்களை தயாரித்து உலகளாவிய அளவில் சந்தைப்படுத்தி வருகிறது, இந்த நிகழ் ஆண்டில் மட்டும் மாருதி சுசுகி ஒரு இலட்சத்து நாற்பத்து ஆறாயிரம் கோடி வருமானம் ஈட்டி இருக்கிறது, இந்தியாவில் அதிக கார்களை உற்பத்தி செய்யும் முன்னனி நிறுவனமாக செயல்பட்டு வரும் மாருதி சுசுகி வெளியிட்டு இருக்கு நியூ டிசையர் மாடல் குறித்து தான் நாம் இங்கு பார்க்க போகிறோம்.
MARUTI SUZUKI New Dzire Specifications
1) மாருதி சுசுகி டிசையர் மொத்தன் 9 வேரியண்ட்களில் வெளியாக இருப்பதாக தகவல்,
2) தற்போது இந்தியாவில் இருக்கும் அனைத்து ஷோ ரூம்களிலும் கிடைக்கிறது,
3) 1.2L Z சீரிஸ் இன்ஜின், பெட்ரோலுக்கு ஒரு லிட்டருக்கு 25.71 கி.மீ வரை மைலேஜ் கொடுக்கும் என கூறப்படுகிறது,
4) CNG க்கு 1 கிலோவிற்கு 33.73 கி.மீ வரை மைலேஜ் கொடுக்கும் என கூறப்படுகிறது,
5) இந்த சீரிஸ்சில் எலக்ட்ரிக் சன் ரூப் கொண்ட முதல் செக்மெண்ட் இது தான்,
6) 360 டிகிரி வியூ கொண்ட ஹெச்டி கேமரா,
7) ஆட்டோமேட்டிக் கியர் டெக்னாலஜி,
8) 6 ஏர் பேக்ஸ் டெக்னாலஜி,
9) 3 வருட வாரண்டி + 6 வருட எக்ஸ்டண்டடு வாரண்டி (Up To 1,00,000 கி.மீ)
விலை: 6.70 இலட்சம் முதல் 10.49 இலட்சம் ரூபாய் வரை இருக்கலாம்