Mahindra BE 6E & XEV 9E - கிட்டதட்ட 600+ Range யில் மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அசத்தலான மாஸ் ஆன எலக்ட்ரிக் கார்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Mahindra BE 6E & XEV 9E - 1945 யில் ஆரம்பிக்கப்பட்டு மும்பையை மையமாக கொண்டு கிட்டதட்ட 79 வருடங்களாக செயல்பட்டு வருகிறது பிரபல ஆட்டோமொபைல் நிறுவனம் மஹிந்திரா, உலகளாவிய அளவில் கிட்டதட்ட 100 நாடுகளில் தங்களது சந்தையை விரிவு படுத்தி இருக்கும் மஹிந்திரா நிறுவனம், வருடத்திற்கு கிட்டதட்ட 15 இலட்சம் கார்களை தயாரித்து உலகம் முழுக்க சந்தைப்படுத்தி வருகிறது.
ஜீப்கள், கார்கள், லாரிகள், ஆட்டோக்கள் என அனைத்து வாகனங்களின் தயாரிப்பிலும் மஹிந்திரா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது, தற்போது சர்வதேச சந்தையில் எலக்ட்ரிக் கார்களின் மவுசு வெகுவாக உயர்ந்து இருப்பதால், மஹிந்திரா நிறுவனமும் அந்த போட்டியிலும் களம் இறங்கி இருக்கிறது, ப்ரீமியமாகவும், நல்ல உயர்தரமாகவும், ஓரளவிற்கு பயனருக்கு ஏற்ற விலையிலும் கொடுப்பது மஹிந்திரா நிறுவனத்தின் பாணி.
இந்த நிலையில் இன்று மஹிந்திரா நிறுவனம் தங்களது இரண்டு அசத்தலான, ப்ரிமீயமான, அதே நேரத்தில் அதிக Range யும் தரக்கூடிய வகையில் இரண்டு கார்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது, Mahindra BE 6E, Mahindra XEV 9E எனப்படும் இரண்டுமே பார்ப்பதற்கு ப்ரீமியமாகவும், கலர்புல்லாகவும், மட்டும் அல்லாமல் இரண்டு கார்களுமே ஒரு சார்ஜுக்கு 600 + கி.மீ Range தரும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
சர்வதேச சந்தையில் மஹிந்திரா வெளியிட்டு இருக்கும் அதிக Range கொண்ட எலக்ட்ரிக் கார் ஆக, இந்த இரண்டும் பார்க்கப்படுகிறது, Mahindra BE 6E, Mahindra XEV 9E என இரண்டின் ஆரம்ப விலை 18.90 இலட்சம் மற்றும் 21.90 இலட்சமாக இருக்கிறது, வருகின்ற பிப்ரவரி 2025 யில் இருந்து உலகளாவிய அளவில் இந்த இரண்டு கார்களும் சந்தைப்படுத்தப்படும் என மஹிந்திரா அறிவித்து இருக்கிறது.