Lectrix LXS 2.0 India's First Cheapest Electric Bike With High Range - சார் என்ற முன்னனி நிறுவனம் ஒன்று, வாடிக்கையாளர்களிடம் எளிதாக பசுமை பைக்குகள் சென்று சேரும் வகையில் வெறும் ஐம்பதாயிரத்தில் ஒரு பைக்கை அறிமுகப்படுத்தி இருக்கிறது, அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Lectrix LXS 2.0 India's First Cheapest Electric Bike With High Range - பொதுவாகவே அனைவருக்குமே பசுமை பைக்குகள் வாங்க வேண்டும் என்ற ஆசை எல்லாம் இருக்கும், ஆனால் அவர்களுக்கு பிரச்சினையாக இருப்பது முதலில் விலை, எல்லா பசுமை பைக்குகளுமே இலட்சங்களில் தான் விலை ஆரம்பிக்கிறது, இன்னொன்று பேட்டரி என்ன ஆகும் ஒரு வேலை வாரண்டி முடிந்ததும் பேட்டரியும் போய் விட்டால் பைக்கை என்ன செய்வது, இன்னொரு பைக்கா வாங்க முடியும் என்று மனதிற்குள் ஓடும் கேள்வி, இந்த இரண்டும் தான் அவர்களை பசுமை பைக்குகள் வாங்குவதில் இருந்து தடுக்கிறது.
வாடிக்கையாளர்களின் இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் முடிவு கட்டும் வகையில் சார் என்ற நிறுவனம் ஒரு புதிய எலக்ட்ரிக் பைக்கை ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது, எளிய வாடிக்கையாளர்களும், பசுமை பைக்கை எளிதாக அணுகும் வகையில், வெறும் 50,000 ரூபாய்க்கு எலக்ட்ரிக் பைக்கை மார்க்கெட்டில் கொண்டு வந்து இருக்கிறது, அது மட்டும் அல்ல பேட்டரிக்கு லைப் டைம் வாரண்டியை நிறுவனம் கொடுக்கிறது, இது போக மோட்டார், சார்ஜர், கன்வர்ட்டர், கண்ட்ரோலர்க்கு 3 வருட வாரண்டி கொடுக்கப்படுகிறது.
சரி, எப்படி 50,000 யில் பைக் சாத்தியம்?
பேட்டரி வித் சப்க்ரிப்சன், அதாவது நீங்கள் மாதம் மாதம் ரூபாய் 999 பேட்டரிக்கு மட்டும் சப்க்ரிப்சனாக கட்ட வேண்டும், நீங்கள் டிவிக்கு, போனுக்கு பில் கட்டுவது போல மாதம் மாதம் ஒரு 999 ரூபாய் மட்டும் இந்த வண்டிக்கான பேட்டரிக்காக கட்ட வேண்டி இருக்கும். நீங்கள் பேட்டரிக்கு லைப் டைம் வாரண்டியை பெற முடியும் என்பதால் மாதம் 999 ரூபாயில் நீங்கள் பல காலத்திற்கு நீங்கள் வாங்கிய எலக்ட்ரிக் வண்டியை பயன்படுத்த முடியும்.
" Lectrix LXS 2.0 என்பது 30 வருடங்களாக லிவ்கார்டு, லிவ் பியூர், லிவ் பாஸ்ட் உள்ளிட்ட தயாரிப்புகளில் ஈடுபட்டு வரும் சார் நிறுவனத்தின் முன்னனி தயாரிப்பு என்பதால் நம்பதகுந்த ஒரு தயாரிப்பு தான், பேட்டரிக்கு எந்த நிறுவனமும் லைப் டைம் வாரண்டியை கொடுப்பதில்லை, இவர்கள் கொடுக்கிறார்கள் என்பதால் பெட்ரோல் வண்டிகளை போல நீண்ட காலத்திற்கு எலக்ட்ரிக் வண்டியை உபயோகிக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது "