JioHotstar Launched - Hotstar மற்றும் Jio Cinema இணைந்து JioHotstar என்ற வலை தளத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கின்றனர்.
ஜியோ மற்றும் ஹாட் ஸ்டார் இணைந்து புதிய வலைதளம் ஒன்றை உருவாக்க இருப்பதாக நீண்ட மாதங்களாவே பேசப்பட்டு வந்தது, இந்த நிலையில் தற்போது இணைவு என்பது உறுதி ஆகி இருக்கிறது, ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் வால்ட் டிஸ்னி நிறுவனம் இணைந்து புதிய டிஜிட்டல் வலைதளமாக JioHotstar என்பதை உருவாக்கி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது.
தியேட்டர்கள், இணையதளங்கள், டாரண்டுகள் என இருந்த மூவி எக்ஸ்பீரியன்ஸ் தற்போது மொத்தமாக வலைதள கலாச்சாரங்களுக்குள் அடங்கி விட்டது, தற்போதைய நவீன காலத்தில் தியேட்டருக்கு என்று தனியாக நேரம் ஒதுக்கி செல்பவர்கள் பெரும்பாலும் குறைந்து இருக்கின்றனர், ஒரு காலத்தில் படங்கள் ஒரு வருடம் ஆனாலும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டு இருக்கும்.
ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் ஒரு படம் ஒரு மாதம் ஓடுவதே பெரிய விடயமாக பார்க்கப்படுகிறது, அதுவும் பைரேசி பிரச்சினைகள் வேறு இருக்கிறது, ஒரு சில படங்கள் தியேட்டர்களில் சுமாராக ஓடினாலும் கூட வலைதளங்களில் பாராட்டப்படுகின்றன, தயாரிப்பாளர்களின் நஷ்டத்தையும் வலைதளங்கள் இதில் குறைக்கின்றன, இந்த வலைதள கலாச்சாரத்தில் Jio வும் செயல்பட்டு வருகிறது.
என்றாலும் கூட அதற்கு பெரிதாக ரீச் கிடைக்கவில்லை, இதனால் நீண்ட மாதங்களாகவே Jio ஆனது Hotstar உடன் இணைய முற்பட்டு வந்தது, பேச்சு வார்த்தை ஒப்பந்தங்கள் எல்லாம் முடிந்து விட்ட நிலையில் தற்போது Hotstar, JioHotstar ஆக மாறி இருக்கிறது, இதனால் பழைய சந்தாதாரர்களுக்கு ஏதும் பிரச்சினையா என்றால் இல்லை, அவர்கள் வழக்கம் போல தங்களது வாட்ச் லிஸ்டை தொடரலாம்.