• India
```

மன அழுத்தத்தை போக்கும் ரோபோ நாய்.. இதன் ஆரம்ப விலை இவ்ளோ தானா?

Jennie robot dog price

By Dhiviyaraj

Published on:  2025-01-13 15:59:59  |    27

தற்போது உலகெங்கும் புதுப்புது நவீன மின்னணு தொழில்நுட்ப பொருட்கள் உருவாக்கப்பட்டு வருவது தொடர்பான செய்திகளை நாம் பார்க்கிறோம். 

சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாசில் தற்போது தொடங்கியுள்ள சர்வதேச மின்னணு சாதன கண்காட்சி, 160 நாடுகளை சேர்ந்த 4 ஆயிரத்து 500 நிறுவனங்கள் கலந்துகொண்டனர்.

இந்த கண்காட்சியில் ஜீனி என்ற ரோபோ நாய் இந்த கண்காட்சியின் ஹைலைட்டுகளில் ஒன்றாக இருந்து இருக்கிறது. நாம் கொடுக்கும் கட்டளைக்கு ஏற்றவாறு இந்த நாய் செயல்படும் என்றும் மூத்த குடிமக்களின் அன்றாட வாழ்க்கையில் இருக்கும் தேவைகளை நிறைவேற்றும் தன்மையை ஜீனி என்ற ரோபோ நாய் செய்யும் என்று கூறுகிறார் இதை உருவாக்கிய டாம் ஸ்டீவன்ஸ்.

அதுமட்டுமின்றி, தனிமையால் அவதிப்படுபவர்கள், மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு இந்த  ஜீனி ரோபோ நாய் உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார். இந்த ரோபோ நாய் ரூபாய் 1,50 லட்சத்திற்கு விற்பனையாக உள்ளது என்று தெரிவித்து இருக்கிறார்.