ISRO Tamil Scientist -இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான ISRO-வில் பணியாற்றிய தமிழர் ஒருவர், தனது வேலையை விட்டு சொந்த நிறுவனத்தை தொடங்கி, இன்று லாபம் அடைந்து கொண்டு இருக்கிறார்.
தொழில் முனைவோர் ராமபத்ரன் சுந்தரம், கால் டாக்ஸி பயணம் செய்த போது ஓட்டுனர் உதயகுமாருடன் நடத்திய உரையாடலை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதில், உதயகுமார் ISRO-வில் பணியாற்றியதை அறிந்ததும் ஆச்சரியப்பட்டதாக கூறியுள்ளார்.
புள்ளியியல் பிரிவில் PhD முடித்த உதயகுமார், ISRO-வில் வேலை செய்து வந்துள்ளார். சொந்தமாக டாக்ஸி நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற கனவில், தன்னுடைய ISRO வேலையை விட்டு விட்டார்.
கன்னியாகுமரியைச் சேர்ந்த இவர், ISRO-வில் ராக்கெட்டுகளுக்கான திரவ எரிபொருட்களின் அடர்த்தியை கணக்கிடும் பணியில் இருந்தார். ஆனால் 2017-ல், நண்பர்களின் உதவியுடன், பெற்றோரின் பெயரில் எஸ் டி கேப்ஸ் (ST CABS) என்ற நிறுவனம் தொடங்கினார்.
இந்த நிறுவனம் ஆண்டு தோறும் ரூ. 2 கோடி வருமானம் ஈட்டுகிறது, மேலும், இங்கு பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு 70% வருமானத்தில் பங்குகளை வழங்குகிறார்.