iQOO Neo 10R - பிரபல iQOO நிறுவனம் வெளியிட இருக்கும் iQOO Neo 10R குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.
சீனாவின் குவாங்டாங்கை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது பிரபல iQOO நிறுவனம், VIVO நிறுவனத்தில் இருந்து ஒரு குழு பிரிந்து கடந்த 2019 முதல் தனியாக செயல்பாடுகளை அறிவித்து iQOO என்ற பெயரில் பல மின்னனு சாதனங்களை தயாரித்து வருகிறது, வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாரு பல அட்டகாசமான மொபைல்களை வெளியிட்டு வருகிறது,
விலையும் ஏற்றவாறு இருக்க வேண்டும், தரவரைவுகளும் அட்டகாசமாக இருக்க வேண்டும் என்ற வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு அதற்கேற்றவாரு iQOO நிறுவனம் செயல்பட்டு தங்களது மின்னனு சாதனங்களை வடிவமைத்தும் வருகிறது. அந்த வகையில் iQOO வெளியிட இருக்கும் iQOO Neo 10R குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மொபைலின் விலை ரூ 30,000 க்குள் இருக்கலாம் என கூறப்படுகிறது, முதற்கட்டமாக மெமோரி 12GB RAM மற்றும் 256GB ROM உடன் இருக்கலாம் என கூறப்படுகிறது, பிராசசரை பொறுத்தமட்டில் Snapdragon 8s Gen 3 chipset உடன் இருக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது, 6.78 Inch டிஸ்பிளேவுடன் 144HZ Refreshing Rate இருக்கலாம் என கூறப்படுகிறது.
கேமராவை பொறுத்தமட்டில் Back Camera 50MP (Sony LYT-600 Sensor) + 8MP (Ultrawide Camera), Selfie Camera 16MP, பேட்டரு 6,400 mAH பேட்டரி 80W பவர் சார்ஜிங் சப்போர்ட்டுடன் மொபைல் வரலாம் என கூறப்படுகிறது, மொபைல் இந்தியாவில் அமேசான் வலைதளத்திலும் iQOO வின் அதிகாரப்பூர்வ தளத்திலும் வருகின்ற மார்ச் 11 அன்று வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.