• India
```

One Plus 13 க்கு போட்டியாக களம் இறங்கும் iQOO 13...அவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க...!

iQOO 13 VS One Plus 13

By Ramesh

Published on:  2024-10-26 13:11:29  |    381

iQOO 13 VS One Plus 13 - ஒன் பிளஸ் 13 அக்டோபர் 31 அன்று வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானதுமே, iQOO நிறுவனமும் போட்டிக்கு iQOO 13 அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

iQOO 13 VS One Plus 13 - சமீபத்தில் சில தினங்களுக்கு முன் ஒன் பிளஸ் நிறுவனம் தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பான ஒன் பிளஸ் 13 மொபைலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தது, இந்த அறிவிப்பு வெளியான ஒரு சில நாட்களிலேயே iQOO நிறுவனத்தின் அடுத்த படைப்பான iQOO 13 மொபைலுக்கான அறிவிப்பும் வெளியானது, அதாவது கிட்டதட்ட ஒரு போட்டிக்கு போட்டி அறிவிப்பு இது என்றே சொல்லலாம், 

அதாவது ஒன் பிளஸ் நிறுவனம், ஒன் பிளஸ் 13 வெளியீடு, அக்டோபர் 31 என தனது வெளியீட்டை அறிவித்ததும், iQOO நிறுவனம் தனது iQOO 13 வெளியீட்டை அக்டோபர் 30 என அறிவித்தது, இதில் இருந்தே இரண்டு நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி என்ன என்பது தெரியும், அதுவும் ஒன் பிளஸ் வெளியாகும் ஒரு நாளுக்கு முன்னதாகவே iQOO 13 வெளியாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் iQOO பக்கம் திரும்ப வாய்ப்பு இருக்கிறது.


iQOO 13 Specification VS One Plus 13 Specification

விலை: Rs 54,990 - Rs 64,990

பிராசசர்: Snapdragon 8 Elite, Octa Core, 4.32 GHz Processor - Snapdragon 8 Elite, Octa Core, 4.32 GHz Processor

RAM & In Built மெமோரி: 12 GB RAM, 256 GB inbuilt - 12 GB RAM, 256 GB inbuilt

பேட்டரி: 6150 mAh Battery with 100W Fast Charging - 6000 mAh Battery with 100W Fast Charging

ஸ்க்ரீன் சைஸ்: 6.82 inches, 1460 x 3200 px, 144 Hz Display with Punch Hole - 6.8 inches, 1440 x 3168 px, 120 Hz Display with Punch Hole

கேமரா: 50 MP + 50 MP + 50 MP Triple Rear & 32 MP Front Camera - 50 MP + 50 MP + 50 MP Triple Rear & 50 MP Front Camera

OS வெர்சன்: Android v14 - Android v15

வெளியீட்டு தேதி: அக்டோபர் 30 - அக்டோபர் 31


" ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, Specification யை ஒப்பிட்டால் One Plus 13 யை சற்றே iQOO 13 விஞ்சி நிற்கிறது, அதனால் நிச்சயம் One Plus 13 வெளியீட்டுக்கு முன்னதாகவே வாடிக்கையாளர்கள் iQOO 13 பக்கம் திரும்ப வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது "