Indian AI Lags Five Years Behind - உலகளாவிய அளவில் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியில் அமெரிக்கா மற்றும் சீனாவை விட இந்தியா 5 வருடங்கள் பின் தங்கி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
உலகளாவிய அளவில் செயற்கை நுண்ணறிவு பல நாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் இந்தியா செயற்கை நுண்ணறிவில் மிகவும் பின் தங்கி இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது, எதிர்காலத்தில் அனைத்திலும் செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் செலுத்திடும் என்னும் போது இந்தியா அதற்கு வெறும் பிள்ளையார் சுழி மட்டுமே போட்டு வைத்து இருக்கிறது.
இந்தியாவில் 200 க்கும் மேற்பட்ட AI ஸ்டார்ட் அப்கள் இருந்தாலும் கூட முதலீடு என்பது மிக மிக கம்மி என்பதால் அவர்களால் பெரிய அளவில் ஏதும் செய்ய முடியவில்லை, டெக் நிறுவனங்களும் தங்களுக்கு செயற்கை நுண்ணறிவால் என்ன தேவையோ அதை மட்டும் எடுத்துக் கொண்டு அதன் கீழ் பெரிய முதலீடு ஆராய்ச்சிகள் ஏதும் செய்யாமல் தங்கள் வேலையை மட்டும் பார்த்து வருகின்றன.
உலகளாவிய முன்னனி AI நிறுவனங்களில் மட்டும் 15 சதவிகித இந்தியர்கள் முக்கிய பிரிவில் பணி புரிந்து வருகின்றனர், ஆனால் இந்தியாவில் AI என்பது, அமெரிக்கா மற்றும் சீனாவை விட கிட்டத்தட்ட 5 வருடங்கள் பின் தங்கி இருக்கிறதாம், பொதுவாக இந்தியாவில் ஆராய்ச்சியாளர்களுக்கு ஏதும் பஞ்சம் இல்லை, ஆனால் அவர்கள் ஆராய்ச்சியை எடுத்து செய்ய முதலீடு என்பது ஒன்று தேவை.
ஒரு செயற்கை நுண்ணறிவு சாதனத்தை உருவாக்க ஒவ்வொரு அமெரிக்க நிறுவனங்களும் சீன நிறுவனங்களும் பில்லியன் டாலர்களை குவித்து ஆராய்ச்சி செய்து வருகின்றன, ஆனால் இந்தியாவில் அந்த முதலீட்டை தைரியமாக போட்டு ஒரு போட்டியை உருவாக்க எந்த நிறுவனங்களும் தயாராக இல்லை, அதனால் தான் AI ஆராய்ச்சியில் இந்தியா மற்ற நாடுகளை விட 5 வருடங்கள் பின் தங்கி இருக்கிறது.