How Our Google Searches Comes As Ads In Social Media - பொதுவாக நாம் கூகுளில் எதவது ஒன்றை தேடி இருப்போம், அடுத்த நிமிடம் இன்ஸ்டாவில் நாம் தேடிய பொருள் விளம்பரமாக வந்து நிற்கும் அது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
How Our Google Searches Comes As Ads In Social Media - எடுத்துக்காட்டாக நாம் இப்போது ஒரு எலக்ட்ரிக் பைக் ஒன்றை கூகுளில் தேடுகிறோம் என வைத்துக் கொள்வோம், அது அடுத்த நிமிடம் விளம்பரமாக நமது இன்ஸ்டா மற்றும் பேஸ்புக் பக்கத்தில் வந்து நிற்கும், பலருக்கும் இது ஆச்சர்யமாக இருக்கும், எப்படி நாம் கூகுளில் தேடிய ஒன்று நமது இன்ஸ்டா மற்றும் பேஸ்புக் பக்கத்தில் வருகிறது என குழப்பமாகவும் இருக்கும்.
அது ஏன், எப்படி வருகிறது என்பதற்கான விடையை நாம் இப்போது பார்க்கலாம், பொதுவாக அனைவருமே தேடுபொறிகளில் அவர்களது GMail அக்கவுண்ட்டை ஓபனிலேயே வைத்து இருப்பார்கள், இதனால் நம்முடைய தேடல்கள் அனைத்தும் ட்ராக்கிங் குக்கீகள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன, இந்த டேட்டாவையும் குக்கிகளையும் வைத்தே நாம் கூகுளில் தேடுவதை மற்ற சமூக வலைதளங்கள் கண்காணிக்கின்றன.
பலரும் கூகுள், பேஸ்புக், இன்ஸ்டா, ட்விட்டர், தேடுபொறி லாக் இன் என அனைத்திற்கும் ஒரே மெயில் ஐடி வைத்து இருப்பார்கள், இவ்வாறாகவே உங்கள் கூகுள் தேடல்கள்,ஒன்றுக்கொன்று பகிரப்பட்டு உங்களது சமூக வலைதளங்களில் விளம்பரம் ஆக்கப்படுகின்றன, உங்கள் தேடல் வரலாறு உள்ளிட்ட உங்கள் தொடர்புகளை பகுப்பாய்வு செய்யும் வழிமுறைகளை சமூக வலைதளங்கள் பயன்படுத்துகிறது.
இது நிகழாமல் இருக்க நீங்கள் தேடுபொறிகளில் உங்களது ஈமெயில்களை லாக் இன் செய்யாமல் வைக்கலாம், எதையாவது கூகுளில் தேடும் போது இக்னிட்டோ மோட்களில் தேடிக் கொள்ளலாம், குறைந்த பட்சம் சமூக வலைதளங்களுக்கு என்று தனியாக ஒரு மெயில் ஐடியை ஓபன் செய்து கொண்டு, உங்களது க்ரோம் லான் இன்க்கு தனியாக ஒரு அதிகாரப்பூர்வ ஈமெயில் ஐடி வைத்துக் கொள்ளலாம்.