Honda Unveils First EV - பிரபல ஹோண்டா நிறுவனம் வெளியிட இருக்கும் முதல் எலக்ட்ரிக் பைக் குறித்து இந்த தொகுப்பில் விவரமாக பார்க்கலாம்.
Honda Unveils First EV - ஜப்பானை மையமாக கொண்டு இயங்கி வரும் ஹோண்டா நிறுவனம், பைக்குகள், பேட்டரி சாதன பொருட்கள், ICE வகை இன்ஜின்கள், ஆட்டோமொபைல்ஸ் பார்ட்ஸ்கள் என பல பொருட்களை தயாரித்து உலகளாவிய அளவில் சந்தைப்படுத்தி வருகிறது, உலகளாவிய அளவில் அதிக அளவில் ICE வகை இன்ஜின்கள் தயாரித்து சந்தைப்படுத்தும் பெருமை ஹோண்டாவிற்கு உரியது.
வருடத்திற்கு கிட்டதட்ட 15 மில்லியன் ICE வகை இன்ஜின்களை ஹோண்டா நிறுவனம் தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறது, இந்தியாவில் ஹீரோ நிறுவனத்துடன் இணைந்து ஹீரோ ஹோண்டா என்ற பிராண்டாக செயல்பட்டு வந்தது, தற்போது ஹீரோ நிறுவனம் தனி நிறுவனமாக செயல்பட்டு வருவதால் ஹோண்டா நிறுவனமும் தனி நிறுவனமாக இயங்கி வருகிறது.
உலகளாவிய சந்தைகளிலும், இந்திய சந்தைகளிலும் தற்போது பசுமை வாகனங்களுக்கான போட்டி அதிகரித்து வருகிறது, பைக்குகள், கார்கள் என எதை வாங்க வேண்டும் என்றாலும் பயனர்கள் எலக்ட்ரிக் வாகனங்களை தான் தெரிவு செய்கிறார்கள், அந்த வகையில் ஹோண்டா நிறுவனமும் தங்களது முதல் எலக்ட்ரிக் பைக்கை சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
Activa E, QC 1 என்ற இரண்டு மாடல்களை தான் ஹோண்டா முதலில் வெளியிட இருக்கிறது, Activa E மாடல் பைக்கின் Range 102 கி.மீ, QC 1 மாடல் பைக்கின் Range 80 கி.மீ எனவும் கூறப்படுகிறது, முதற்கட்டமாக Activa E வருகின்ற ஜனவரி 1,2025 அன்று வெளியாக இருக்கிறது, பின்னர் அடுத்தகட்டமாக QC1 மாடலும் அதற்கு பின்னராகவே வெளியிடப்பட இருப்பதாக தகவல்.
" ஹோண்டா எலக்ட்ரிக் வாகன போட்டிகளில் கொஞ்சம் லேட்டாக தான் களம் இறங்கி இருக்கிறது, இருந்தாலும் தோனி போல கடைசியாக வந்து சிக்ஸர் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது "