HMD Fusion Launch Date And Specifications - பதினாறாயிரத்துக்கு ஒரு பக்காவா ஒரு மொபைல் வாங்கனும்னு நினைக்கிறவங்க இன்னிக்கு ஒரு நாள் மட்டும் வெயிட் பண்ணா போதும், நாளைக்கே வாங்கிடலாம் HMD Fusion.
HMD Fusion Launch Date And Specifications - பின்லாந்தை மையமாக கொண்டு உலகளாவிய அளவில் இயங்கி வரும் பிரபல மின்னனு நிறுவனம் தான் HMD நிறுவனம், முன்னாள் நோகியா நிறுவனத்தின் முன்னனி தலைமைகள் அனைத்தையும் கொண்டு இயங்கி வரும் HMD நிறுவனம், மொபைல், கம்ப்யூட்டர்ஸ், மின்னனு சாதனங்கள், டேப்லட்டுகள் உள்ளிட்டவைகளை தயாரித்து, உலகளாவிய அளவில் சந்தைப்படுத்தி வருகிறது.
பெருகி வரும் ஸ்மார்ட் போன் கம்பெனிகளால், நிறுவனங்களுக்கு தங்கள் மொபைலை மார்க்கெட்டுகளுக்குள் புகுத்த ஏதாவது வித்தியாசம் காட்ட வேண்டி இருக்கிறது, தரம், விலை,டிசைன்ஸ், மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் இதில் ஒன்றிரண்டு காரணிகளை எடுத்துக் கொண்டு மொபைலை சந்தைப்படுத்துபவர்கள் மட்டுமே தற்போது உலகச்சந்தையில் நிலைக்க முடிகிறது.
அந்த வகையில் HMD தரமும், மதிப்பு கூட்டப்பட்ட சேவையும், விலையும் என மூன்று காரணிகளை கையில் எடுத்து இருக்கிறது, HMD Fusion என்ற பெயரில் மூன்று Outfit களுடன் (Casual, Flashy, Gaming), 102MP + 2MP பின் கேமரா, 50MP செல்ஃபி கேமரா, 8GB RAM, 256GB ROM, Snapdragon 4 Gen 2 Processor, Android 14 இயங்கு தளம், 5000mAh பேட்டரி + 33W சார்ஜர் என இவ்வளவு தர வரைவுகளை கொண்டு வெளியாக இருக்கிறது.
விலையை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீங்க, இந்தியால இந்த மொபைலோட விலை ரூ 15,999 தான், உங்களுக்கு ஏதாச்சு Outfit வேணும்னா அதுக்கு ஒரு எக்ஸ்ட்ரா ரூ 5,999, மத்தபடி பக்காவான ஒரு மொபைல் தான், அதுல எந்த சந்தேகமும் இல்லை, வாங்க நினைக்கிறவங்க இன்னிக்கு ஒரு நாள் பொறுத்துகோங்க, நவம்பர் 29 Amazon மற்றும் HMD Official தளத்துல ரிலீஸ் ஆகுது.
" ஆரம்ப நாள்ல மட்டும் தான் ரூ 15,999, அதுக்கப்புறம் விலை கூட வாய்ப்பு இருக்கிறதாம் அப்படின்னா இப்பவே முந்துங்க "