World First AI Chatbot - 65 ஆண்டுகளுக்கு முன்னதாகவே உலகின் முதல் Chatbot உருவாக்கம் துவங்கி விட்டது என்றால் நம்ப முடிகிறதா, அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
World First AI Chatbot - Chat GPT, Open AI, Google Gemini, Zendesk, Meta AI என பல Chatbot தொழில்நுட்பங்கள் உலகளாவிய அளவில் தற்போது இருக்கிறது, தற்போது அனைத்து நிறுவனங்களுமே தங்களுக்கு என்று ஒரு அசிஸ்டண்ட் போல AI தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர், அந்த வகையில் ஒவ்வொருவரும் தங்களுக்கு தேவையான AI தொழில் நுட்பத்தை அவர்களே தயாரித்துக் கொள்கின்றனர்,
உதாரணத்திற்கு Google, Tesla போன்ற நிறுவனங்கள் எல்லாம் அவர்கள் நிறுவனத்திற்கான AI தொழில் நுட்பத்தை அவர்களே தயாரித்து பயன்படுத்தி வருகின்றனர், இந்த AI தொழில் நுட்பம், Chatbot, Optimus போன்றவைகள் நமக்கு தற்போது விசித்திரமாக தெரியலாம், ஆனால் ஒருவர் இந்த Chatbot களை எல்லாம் 60 ஆண்டுகளுக்கு முன்னமே பயன்படுத்தி இருக்கிறார்.
அவர் பெயர் தான் ஜோசப் வீசன்பவும், கேம்ப்ரிட்ஜை சேர்ந்த MIT பல்கலைக்கழகத்தில் புரொபசர் ஆக பணியாற்றியவர், இவர் 1960 காலக்கட்டத்திலேயே AI Chatbot க்கான புரோகிராம் ஒன்றை எழுதி அதில் வெற்றியும் கண்டு இருந்திருக்கிறார், ELIZA என்று அழைக்கப்படும் அந்த Chatbot மனிதனுக்கும் இயந்திரத்திற்கும் இடையே நடக்கும் ஒரு உரையாடல் போல உருவாக்கப்பட்டதாம்.
கிட்டத்தட்ட 420 வரிகளுக்கும் மேல் கொண்டு இருக்கும் அந்த புரோகிராமை ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஜெஃப் மற்றும் கேம்ப்ரிஜ் MIT யை சேர்ந்த மைல்ஸ் கிரவுளி இருவரும் இணைந்து தற்காலத்திற்கு ஏற்ப வடிவமைத்து மீண்டும் இயங்க வைத்து இருக்கின்றனர், இன்றைய AI க்கு எல்லாம் அது கிரேட் கிராண்ட் தாத்தாவாக இருக்கும் என கூறப்படுகிறது.