• India
```

ரூ 20-ல் 100 km மைலேஜ்!! விற்பனையில் சக்கை போடும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்..

Electric Scooter Benefits In Tamil

By Dhiviyaraj

Published on:  2025-01-25 08:54:07  |    52

உலகளவில் மின்சார ஸ்கூட்டர் (Electric Scooter) விற்பனையில் சீனா முன்னணியில் உள்ளது. ஆனால், இந்தியா விரைவில் முதல் இடத்தை பிடிக்கும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.

உலகளவில் மின்சார ஸ்கூட்டர் (Electric Scooter) விற்பனையில் சீனா முன்னணியில் உள்ளது. ஆனால், இந்தியா விரைவில் முதல் இடத்தை பிடிக்கும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.

 2024ல் இந்தியாவில், எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மொத்த 11,21,821  விற்பனையாகி இருக்கிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 71,626 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி இருக்கிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

மத்திய, மாநில அரசுகள் மின்சார வாகனங்களை ஊக்குவிக்க மொத்த விலையிலிருந்து மானியம் வழங்குகின்றன. மேலும் பெட்ரோல் வாகனங்களை அதிக மைலேஜ் கொடுப்பதால் பலரும் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். 

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் சராசரியாக 100 கிமீ பயணம் செய்ய முடியும். 100 கிமீக்கு சுமார் 4 யூனிட் மின்சாரம் மட்டுமே தேவைப்படும்.  4 யூனிட் மின்சாரத்தின் செலவு வெறும் ரூ 20 மட்டுமே. இந்த விஷயங்களை கருத்தில் கொண்டு, எலக்ட்ரிக் வாகனங்கள் எதிர்காலத்தின் முக்கிய போக்காக உருவாகி வருகின்றன.