Electric Planes Manufacturers -பொதுவாக எலக்ட்ரிக் விமான கண்டு பிடிப்புகளில் கலக்கி வரும் பைகா நிறுவனம், தற்போது அமெரிக்க பாதுகாப்பு தளவாடங்களிலும் தனது கண்டு பிடிப்பை புகுத்த இருக்கிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் செயல்பட்டு வரும் எலக்ட்ரிக் விமானங்களை தயாரிக்கும் ஒரு சிறிய நிறுவனம் தான் இந்த பைகா. முதலில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் தானாகவே இயங்க கூடிய பெலிகன் ஸ்ப்ரே என்ற எலக்ட்ரிக் விமானத்தை தான் இந்த நிறுவனம் தயார் செய்து வெளியிட்டது. பொதுவாக பல ஏக்கரில் பயிரிட்டு இருக்கும் விவசாயிகளுக்கு, பயிர்களுக்கு பூச்சி மருந்து அடித்தல் என்பது மிக மிக சிரமமான காரியமாக இருக்கும். மேலும் அவர்களாக பூச்சு மருந்தை தெளிக்கும் போது ஒரு சில உடல் உபாதைகளும் அவர்களுக்கு ஏற்படலாம். அதனை எல்லாம் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது தான் இந்த பெலிகன் ஸ்ப்ரே. அரை மணி நேரத்தில் பல ஏக்கர் பயிர்களுக்கு அதுவாகவே மருந்தடித்து, விவசாயிகளின் வேலையை மிகவும் எளிதாக்குகிறது.
இந்த பெலிகன் ஸ்ப்ரே ஏவியேசன் மார்க்கெட்டுகளில் ஒரு புதிய பரிணாமத்தை தோற்றுவித்ததும், பெலிகன் கார்கோ என்ற ஒரு புதிய எலக்ட்ரிக் விமானத்தை பைகா நிறுவனம் வெளியிட்டது. இது தான் உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் கார்கோ நிறுவனம் ஆக அறியப்படுகிறது. கிட்டதட்ட 400 பவுண்டுகள் (181 கிலோ) எடையை ஏற்றக்கூடிய வகையில், 321 கி,மீ தூரமும் பறக்க கூடியதாக இந்த பெலிகன் கார்கோ வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார்கோ விமானம் தான் தற்போது பைகாவின் அதி சிறந்த கண்டு பிடிப்பாக பார்க்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகம், தங்களது பாதுகாப்பு தளவாடங்களில் பைகா நிறுவனத்தின் பெலிகன் கார்கோ விமானத்தை இணைக்க திட்டமிட்டு இருக்கிறது. பைகா நிறுவனமும் அதற்கு ஒப்புதல் அளித்து, பெலிகன் கார்கோவில் சிறு மாறுதல்கள் செய்து ரம்ரன்னர் என்ற பெயரில் தங்களது எலக்ட்ரிக் கார்கோ விமானத்தை, அமெரிக்க பாதுகாப்பு தளவாடங்களுக்கு கொடுக்க இருக்கிறதாம்.
40 மில்லியன் அமெரிக்க டாலர்களை தற்போது நிறுவனத்தின் மீது முதலீடு செய்து இருக்கும் பைகா நிறுவனம், நிறுவனத்தை விரிவு படுத்தவும், பாதுகாப்பு தளவாளடங்களுக்கான கார்கோ விமானத்தை தயாரிப்பதிலும் அந்த முதலீட்டை முழுமையாக பயன்படுத்த இருக்கிறதாம்