Electric Bus News - மின்சார ஸ்கூட்டர் மற்றும் மின்சார கார்கள் மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில், இதோ மின்சார பேருந்துகளும் வந்துவிட்டது.
வாகனப் புகைகள் தான் பெரும் அளவில் சுற்றுச்சூழலை பாதிப்பு அடையச்செய்கிறது. இந்நிலையில் சுற்றுச்சுழலுக்கு எந்த விதத்திலும் மாசு ஏற்படுத்தாமல் தயாரிக்க பட்டுள்ளது, இந்த மின்சார பேருந்து.
மேலும், இதில் பல்வேரு சிறப்பு அம்சங்கள் உள்ளது. பொது மக்களின் போக்குவரத்தை மிகவும் எளிமையாக மாற்றி இருக்கிறது.
மேலும், மின்சார பேருந்துகளை உற்பத்தி செய்வது தொடர்பான ஆணைகளை மத்திய அரசு மாநில அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளவில்லை.
கனரக தொழில்துறை அமைச்சகம், மின்சாரப் பேருந்துகளின் உற்பத்தியில் நேரடியாக தலையிடவில்லை.இருந்தும், மின்சார மற்றும் கலப்பின வாகனங்கள்(xEVs) ஊக்குவிக்க மத்திய அரசு 2015 ஆம் ஆண்டில் FAME India என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
FAME India திட்டத்தின் முதல் கட்டத்திற்கு ரூ.895 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2019 மார்ச் 31ஆம் தேதிக்குள் செயல்படுத்தப்பட்டது.
பிறகு, FAME India திட்டத்தின் இரண்டாம் கட்டம், 2019 ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து 5 ஆண்டுகளுக்கான ரூ.11,500 கோடி மொத்த பட்ஜெட் பெரும் ஆதரவைப் பெற்றுக்கொண்டது.
மேலும் , FAME India திட்டத்தின் கீழ், 425 மின்சார பேருந்துகள் மற்றும் கலப்பின பேருந்துகளை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இயக்க அனுமதிக்கப்பட்டது. இரண்டாம் கட்டத்தின் கீழ், 6,862 மின்சாரப் பேருந்துகளை நகரங்களுக்கும், அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் மாநில அரசு நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
2024 ஆகஸ்ட் 6ஆம் தேதியிலான நிலவரப்படி, மொத்தம் 6,862 மின்சார பேருந்துகளில் 4,901 பேருந்துகள் இயக்கமாக உள்ளன. இந்த விவரங்களை மத்திய கனரக தொழில்கள் மற்றும் எஃகுத் துறை இணையமைச்சர் வெளியிட்டுள்ளார்.