• India
```

அமெரிக்காவுக்கு ஆட்டம் காட்டிய 29 வயது சீன பெண்!! பல கோடியில் வருமானம்

Behind DeepSeek Global Success

By Dhiviyaraj

Published on:  2025-01-30 16:43:11  |    9

உலகில் சாட்ஜிபிடி, ஜெமினி, கிளாட் போன்ற முன்னணி செயலிகள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த நிலையில், புதிய போட்டியாக சீனாவின் டீப்சீக் (DeepSeek) பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

செயற்கை நுண்ணறிவின் (AI) உலகில் சாட்ஜிபிடி, ஜெமினி, கிளாட் போன்ற முன்னணி செயலிகள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த நிலையில், புதிய போட்டியாக சீனாவின் டீப்சீக் (DeepSeek) பெரும் கவனத்தை பெற்றுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்குள், டீப்சீக் அமெரிக்க ஆப் ஸ்டோரின் முதலிடத்தைப் பிடித்து, உலகளவில் வேகமாக பரவியிருக்கிறது.

தற்போது அமெரிக்கா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் சாட்பாட்டை விட டீப்சீக் செயலியைபயன்படுத்தி வருகிறார்கள். அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களைப் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. அதன் வருகையால், முன்னணி ஏஐ நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி கண்டுள்ளன.


ஹாங்சோவைத் தலைமையிடமாகக் கொண்ட டீப்சீக், 2023 ஆம் ஆண்டு 40 வயதான லியாங் வென்ஃபெங் தலைமையில் உருவாக்கப்பட்டது. ஆனால், அதன் வெற்றிக்குப் பின்னால் மிக முக்கியமான பங்கு வகித்தவர் 29 வயதான லுவோ ஃபுலி. இயற்கை மொழி செயலாக்கத்தில் சிறந்து விளங்கும் லுவோ ஃபுலி, டீப்சீக் செயலியின் மொழிபெயர்ப்பு மற்றும் உரையாடல் திறனை முன்னேற்றுவதில் முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

பெய்ஜிங் நார்மல் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பயின்ற லுவோ ஃபுலி, 2019 ஆம் ஆண்டு ACL மாநாட்டில் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரைகளால் தொழில்நுட்ப உலகின் கவனத்தை ஈர்த்தார். இது அவரை அலிபாபாவின் DAMO அகாடமியில் ஆராய்ச்சியாளராக கொண்டு சென்றது, அங்கு அவர் VECO மற்றும் மூல ஆலிஸ் மைண்ட் திட்டங்களில் முக்கிய பங்கு வகித்தார்.

2022 ஆம் ஆண்டு டீப்சீக்கில் இணைந்த லுவோ ஃபுலி, அதன் V2 மாடலை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கினார். அவரது திறமையை முன்வைத்து, சவுத் சைனா மார்னிங் போஸ்ட் அவருக்கு ஆண்டுக்கு 10 மில்லியன் யுவான் சம்பளம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.