• India
```

கூகுளுக்கு குட் பை...இனிமே தேடுபொறின்னா அது ChatGPT தான்...!

ChatGPT VS Google

By Ramesh

Published on:  2024-11-09 22:44:18  |    173

ChatGPT VS Google - உலகின் நம்பர் 1 தேடுபொறியாக அறியப்படும் கூகுளை பின்னுக்கு தள்ளிவிட்டு ChatGPT நிறுவனத்தின் SearchGPT அந்த இடத்தை ஆட்கொள்ளும் என்று ஒரு கருத்து கூறப்பட்டு வருகிறது அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ChatGPT VS Google - உலகளாவிய அளவில் நம்பர் 1 தேடுபொறியாக செயல்பட்டு வருகிறது கூகுள், நாள் ஒன்றுக்கு 8.5 பில்லியன் தேடல்கள் நிகழ்கிறது, ஒரு வினாடிக்கு 99,000 தேடல்கள் கூகுளில் அரங்கேறி வருகிறது, ஒவ்வொரு நிமிடத்திற்கும் 5.94 மில்லியன் தேடல்கள் நிகழ்கிறது, இது போக ஒருவர் என்ன தேட வேண்டும் என்றாலும் கூகுளை தான் நாடுவார்கள், ஏன் கூகுளையே கூட கூகுளில் தேடுபவர்களும் உண்டு, 

கிட்டதட்ட 26 வருடங்களுக்கும் மேலாக உலகளாவிய அளவில் எந்த நிறுவனத்தாலும் அசைத்து பார்க்க முடியாத அளவிற்கு அசுர வளர்ச்சி அடைந்து இருக்கிறது கூகுள், ஆனால் தற்போது பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ChatGPT சற்றே கூகுளை அசைத்து பார்க்க துணிந்து இருக்கிறது, அதாவது அவர்கள் உருவாக்கிய SearchGPT சற்றே உலகளாவிய கூகுள் பயனாளர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது,



நாம் தேடும் ஒரு விடயம் குறித்து, பல தகவல்களை எல்லாம் ஒன்று சேர்த்து பயனர்களுக்கு ஏற்றவாரு ஒரு தொகுப்பாக தருவதில் ChatGPT கில்லாடியாக திகழ்கிறது, ஆனால் கூகுளுக்குள் நாம் தேடும் தகவல்களை இன்னும் தேட வேண்டிய நிலை இருக்கிறது, இதனால் தான் ChatGPT யின் SearchGPT பயனர்களிடம் கொஞ்சம் அட்வான்ஸ்டு தேடுபொறியாக பார்க்கப்படுகிறது.

ஆனால் கூகுள் அளவிற்கு ChatGPT வளர இன்னும் அதன் பயன்களை பயனாளர்களிடம் நிறையவே கொண்டு செல்ல வேண்டி இருக்கிறது, கூகுள் பில்லியன்களில் தேடல்கள் வைத்து இருக்கும் போது ChatGPT இன்னமும் மில்லியன்களின் தான் சென்று கொண்டு இருக்கிறது, இன்னமும் ChatGPT தரும் தகவல்களுக்கான முகாந்திரம் மற்றும் அதன் தகவல் மீதான நம்பிக்கை என்பது பயனாளர்களுக்கு சந்தேகம் இருக்கிறது.

" அந்த தகவல்கள் மீதான நம்பிக்கை தான் கூகுளின் பலம் மற்றும் ChatGPT யின் பலவீனம், கூகுள் தரும் தகவல்களின் நம்பிக்கையை ChatGPT பெற இன்னும் யுகங்கள் கூட ஆகலாம் என்கின்றனர் டெக் வல்லுநர்கள் "