Cancer Killing Nanorobots - ஸ்வீடன் விஞ்ஞானிகள் கேன்சர் செல்களை கொள்ளும் ஒரு நானோ ரோபோட் ஒன்றை கண்டு பிடித்து இருக்கிறார்கள் அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உலகளாவிய அளவில் மருத்துவர்களுக்கு கட்டுப்படுத்த முடியாத மற்றும் மிகவும் ஒரு சேலஞ்சிங்கான நோயாக இருப்பது எது என்றால் புற்றுநோய் என்று சொல்லலாம், பெரும்பாலும் புற்றுநோய்க்கு மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களின் 20 சதவிகிதம் பேர் மட்டுமே புற்று நோயில் இருந்து பூரணமாக விடுபடுவதாக ஒரு தகவல் இருக்கிறது.
மீதி 80 சதவிகிதம் பேர் தன் ஆயுள்காலத்தை நீட்டிக்க தினம் தினம் போராடும் சூழல் தான் இங்கு இருக்கிறது, பெரும்பாலும் அதற்காக கொடுக்கப்படும் சிகிச்சைகளே அவர்களது வாழ்வியலை சிதைத்து விடுவதாகவும் தகவல், அந்த வகையில் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் புற்று நோய்க்கு தடுப்பூசிகளை கண்டி பிடித்து இருப்பதாக தெரிவித்து இருந்தாலும் அது எந்த அளவிற்கு ரியாக்ட் செய்யும் என்பது டவுட் தான்.
இதற்கிடையில் ஸ்வீடன் விஞ்ஞானிகள் இந்த புற்று நோய் செல்களை கையாள ஒரு புதிய கண்டிப்பை மேற்கொண்டு இருக்கின்றனர், அதாவது இது ஒரு அமினோ அமிலங்களால் ஆன ஒரு குட்டி ரோபோட், இது உடலில் ஊசிகளின் மூலம் உள் செலுத்தப்படுகிறது, இது தீங்கு விளைவிக்கு புற்று நோய் செல்களுக்கு எதிராக போராடி புற்றி நோய்க்கட்டிகளை சுருங்க செய்யும்.
பொதுவாக சாதாரண புற்று நோய் மருந்துகளும், தெரபிகளும் புற்றுநோய் செல்களை கண்டறிந்து அதை மட்டும் நீக்குவதில் தோற்று போகின்றன, அவைகள் புற்றுநோய் செல்களோடு நல்ல செல்களையும் சேர்த்து அளிக்கின்றன, ஆனால் இந்த டைனி ரோபோட்களில் இருக்கும் டி என் ஏ கட்டமைப்பு புற்று நோய் செல்களை கண்டறியும் அபார திறன் உடையதாக ஸ்வீடன் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
" இந்த நானோ ரோபோட் மற்ற செல்களை தாக்காமல், புற்று நோய் செல்களை மட்டும் கண்டறிந்து அதை குறிப்பாக டார்கெட் செய்யும் வல்லமை பெற்றதால் இது தனித்துவமான சிகிச்சை முறையாக இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து "