• India
```

வந்துட்டேனு சொல்லு..ஒரே மாதத்தில் BSNL யில் இணைந்த 30 இலட்சம் வாடிக்கையாளர்கள்..!

BSNL Massive Surge In New Customers

By Ramesh

Published on:  2024-10-27 13:37:33  |    535

BSNL Massive Surge In New Customers - BSNL நெட்வொர்க்கில் ஒரே மாதத்தில் 30 இலட்சம் வாடிக்கையாளர்கள் இணைந்து இருப்பது புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

BSNL Massive Surge In New Customers - கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் டாரிஃப் விலையை ஏற்றியதால் பல வாடிக்கையாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர், இதனால் பலரும் தனது நம்பரை அப்படியே BSNL க்கு மாற்றிய நிகழ்வும் அரங்கேறியது, டாரிஃப் ஏற்றிய ஒரே மாதத்தில் ஏர்டெல் நிறுவனத்தில் இருந்து 15 இலட்சம் வாடிக்கையாளர்களும், வோடஃபோன் நிறுவனத்தில் இருந்து 14 இலட்சம் வாடிக்கையாளர்களும் விலகினர்.

அதே சமயத்தில் அந்த ஒரே மாதத்தில் BSNL நிறுவனத்தில் 30 இலட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இணைந்தனர், இது BSNL யில் அதிக வாடிக்கையாளர்கள் ஒரே மாதத்தில் இணைந்த புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது, பல குடும்பத்தினர் ஒட்டு மொத்த பேமிலிக்கும், வீட்டில் ஒரே ஒரு WIFI கனெக்சன் நிறுவி விட்டு அனைத்து சிம்களையும் BSNL க்கு மாற்றி இருக்கின்றனர்.



வாடிக்கையாளர்கள் BSNL க்கு மாறுவதற்கான காரணம்?

வெறும் 108 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 60 நாட்கள் அன்லிமிட்டடு கால்ஸ், 1GB/Day இண்டர்நெட், 500 மெசேஜ்கள் என இவ்வளவும் BSNL தருகிறது, ஆனால் அதுவே மற்ற நெட்வொர்க்குகளின் புதிய டாரிப்களில் இதே ப்ளான்களை பெறுவதற்கு கிட்ட தட்ட 300 ரூபாய் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது, அதாவது கிட்ட தட்ட 3 மடங்கு அதிக பணம் கொடுக்க வேண்டி இருக்கிறது. இதுவே பல வாடிக்கையாளர்களையும் BSNL பக்கம் திரும்ப வைத்து இருக்கிறது.

தற்போது BSNL தமிழகம் முழுக்க 4G கிடைக்க வழி வகை செய்து வருகிறது, 5G குறித்து 2025 யில் யோசிக்க முடிவெடுத்து வருகிறது, மற்ற நெட்வொர்க்குகளின் அழுத்தத்தால் BSNL யின் நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்படுகிறது, அது போக மத்திய அரசும் BSNL நிறுவனத்திற்கு சரிவர நிதிகள் ஒதுக்குவதில்லை, நிதிகல் சரியாக ஒதுக்கப்பட்டு BSNL யை ஒன்றிய அரசு தூக்கி நிறுத்தினால் மற்ற நெட்வொர்க்குகளை எல்லாம் பின்னுக்கு தள்ளி அதிக இலாபம் பெறும் என்பதில் ஐயமில்லை.