• India

ரூ 10,000-ல் சிறந்த ஸ்மார்ட் போனை வாங்க வேண்டுமா?.. சிறந்த offer!!

Best smart phone under 10000 rs

By Dhiviyaraj

Published on:  2025-01-12 12:50:04  |    5

இந்த காலகட்டத்தில் ஸ்மார்ட்போனை வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்று ரூ 10,000 பட்ஜெட்டில் சிறந்த ஸ்மார்ட்போனை பற்றி பார்க்கலாம் வாங்க..

விவோ Y18T (Vivo Y18T) – 

விவோ Y18T ஸ்மார்ட்போன் 50 MP + 0.08 MP மெகா பிக்சல் முதன்மை கேமராவுடன் வருகிறது. செல்ஃபிக்காக 8 MP முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது.

மெயின் கேமராவில் Rear f/1.8 லென்ஸ்,

செல்ஃபி கேமராவில் f/2.0 லென்ஸ் கொடுக்கப்பட்டதால், துல்லியமான புகைப்படங்கள் எடுக்க முடியும்.

இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் LCD டிஸ்ப்ளே,

4ஜிபி ரேம்,128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.

15W வேகமான சார்ஜிங் கொண்ட 5000 mAh பேட்டரி கொண்டுள்ளது.

Unisoc Octa-core ப்ராசஸர் மூலம் செயல்படுகிறது.

இது ஸ்பேஸ் பிளாக் மற்றும் ஜெம் கிரீன் வண்ணங்களில் கிடைக்கிறது. விலை ரூ.9,499 மட்டுமே.


சியோமி ரெட்மி A4 (Xiaomi Redmi A4) – 

சியோமி ரெட்மி A4, 50 MP முதன்மை கேமரா மற்றும் 5 MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.

Auxiliary லென்ஸ் மற்றும் f/1.8 (wide) வசதி இருப்பதால், அச்சு பதித்ததுபோல புகைப்படங்கள் எடுக்கலாம்.

செல்ஃபி கேமரா மூலம் 1080p@30fps வீடியோ பதிவு செய்யலாம்.

இதில் 6.88 இன்ச், 120Hz IPS LCD டிஸ்ப்ளே உள்ளது.

Snapdragon 4s Gen 2 சிப்செட், 4ஜிபி ரேம்,

18W பாஸ்ட் சார்ஜிங்,

5160 mAh பேட்டரி ஆகியவற்றுடன் வருகிறது.

இந்த போனின் விலை ரூ.9,498 மட்டுமே. குறைந்த விலையில் சிறந்த கேமரா தேடுபவர்களுக்கு இது சிறந்த தேர்வு.


மோட்டோரோலா G35 (Motorola G35) 

மோட்டோரோலா G35 மாடலில் 50 MP அல்ட்ராவைட் கேமரா,

16 MP செல்ஃபி கேமரா உள்ளது.

விதவிதமான துல்லியமான புகைப்படங்கள் எடுக்க இந்த போன் பயணிகளுக்கு சிறந்த தேர்வு.

4ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ்

T760 ப்ராசஸர்,

5000 mAh பேட்டரி உடன் பாஸ்ட் சார்ஜிங் வசதி.

Android 14 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பெரிய வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட்டில் ரூ.9,999க்கு கிடைக்கிறது.