• India
```

கைல ஒரு 8500 ரூபாய் தான் இருக்கு...5G மொபைல் கிடைக்குமான்னு கேட்டா...கண்டிப்பா கிடைக்கும்...!

Best Mobile Under 10000 5G

By Ramesh

Published on:  2025-01-31 23:18:13  |    47

5G Mobile Under 10000 - ஒரு வருசத்துக்கு முன்னாடி ஒரு 20,000 ரூபாய் இருந்தா தான் 5G மொபைல்னு ஒன்னு வாங்க முடியும், ஆனா இப்ப அப்படி இல்ல, 10,000 ரூபாய்க்கே 5G மொபைல் கிடைக்குது.

பொதுவாகவே என்ன வாங்கனும்னாலும் பட்ஜெட் அப்படிங்கிறது இந்த காலத்துல ரொம்ப ரொம்ப அவசியம், ஒரு காலத்துல 20,000 ரூபாய்க்கு தான் 5G மொபைல் கிடைக்கும், ஆனா இப்பலாம் பல பிராண்டடு கம்பெனிகளே 10,000 ரூபாய்க்கு மொபைல் கொண்டு வந்திட்டாங்க, ஒரு சிலர் மொபைல்ல ஏதுமே பாக்க மாட்டாங்க, ரொம்ப சிம்பிளா பயன்படுத்துவாங்க,

அவங்களுக்கு இந்த 20,000 ரூபாய் மொபைல், 50,000 ரூபாய்க்கு மொபைல் எல்லாம் செட் ஆகாதுன்னு இல்ல, தேவை இல்ல, எப்பவாச்சு யூடியூப், எப்பவாச்சு கால்குலேட்டர், எப்பவாச்சு FM இப்படி மட்டும் பயன்படுத்துரவங்களுக்கு ஒரு 10,000 ரூபாய்க்கு உள்ள ஒரு மொபைல் இருந்தாலே போதும், அப்படி மொபைல் இருக்கான்னா கண்டிப்பா இருக்கு,



சரி, இருக்கு குறைந்தபட்சம் நாம கேக்குற தரவரைவுகள் எல்லாம் இருக்குமா? கண்டிப்பா இருக்கும்!

Tecno POP 9 5G Specifications

மெமோரி: 4GB RAM + 64GB ROM | 4GB RAM + 128GB ROM | 8GB RAM + 128GB ROM

ஸ்க்ரீன்: 6.67 inch + 120Hz Refresh Rate + HD+

இயங்குதளம்: Android 14

ரிசொல்யூசன்: 720 x 1600 Pixels

கேமரா: 48MP Sony Camera | 8MP Front Camera

பேட்டரி: 5000 mAh Battery + 18W Fast Charging Support

பிராசசர்: MediaTek Dimensity 6300

GPU: Mali-G57 MC2

விலை: 4GB RAM + 64GB ROM - 8,499 RS | 4GB RAM + 128GB ROM - 9,399 RS | 8GB RAM + 128GB ROM - 11,999 RS

கிடைக்கும் தளம்: Amazon, Tecno Official

" கைல ஒரு ஒன்பதாயிரம் தான் இருக்கு, ஆனா பக்காவா ஒரு 5G மொபைல் வாங்கனும்னு யோசிக்கிறவங்களுக்கு இந்த Tecno POP 5G ஒரு பெஸ்ட் ஆப்சனா இருக்கும் "