• India
```

ஒரு சார்ஜ்க்கு 153 கி.மீ மைலேஜ்...பஜாஜ் வெளியிட்டு இருக்கும்...ஒரு அசத்தலான எலக்ட்ரிக் ஸ்கூட்டி...!

Bajaj Chetak Latest Electric Bike

By Ramesh

Published on:  2025-01-16 12:38:37  |    23

Bajaj Chetak Latest Electric Bike - பிரபல இந்திய நிறுவனம் ஆன பஜாஜ் கடந்த 2019 ஆம் ஆண்டு சீட்டாக் என்ற பெயரில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பை துவங்கியது, வருடத்திற்கு 5 இலட்சம் எலக்ட்ரிக் பைக்குகளை தயாரிக்கும் அளவிற்கு பஜாஜ் பிளாண்ட்டுகள் கெபாசிட்டியை கொண்டு இருக்கிறது, வருடம் வருடம் புது புது மாடல்களை அறிமுகப்படுத்தி வரும் பஜாஜ் நிறுவனம் ஆன சீட்டாக்கின் புதிய மாடல் ஒன்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தற்போது சீட்டாக் வெளியிட்டு இருக்கும் 35 சீரிஸ்சின் விலை ஆனது, 1,20,000 ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது, 3501, 3502 என இரண்டு வேரியண்ட்களில் சீட்டாக்கின் புதிய 35 சீரிஸ் கிடைக்கிறது, முதலாவதாக சீட்டாக்கின் 3501 மாடல் குறித்து பார்க்கலாம், முழுவதும் டச் ஸ்க்ரீன், ஒரு சார்ஜ்க்கு 153 கி.மீ வரை மைலேஜ், மூன்று மணி நேரத்தில் 0-80% சார்ஜ், 35L Boot ஸ்பேஸ், டாப் ஸ்பீடு 73 கி.மீ பெர் ஹவர்,



Reversing Mode, எலக்ட்ரானிக் சாவி, 3 வருட அல்லது 50,000 கி.மீ வரை வாரண்டி, ஸ்டீல் பாடி, App கனெக்டிவிட்டி என பல முன்னனி தரவரைவுகளை பஜாஜ் சிட்டாக் 3501 கொண்டு இருக்கிறது, மார்க்கெட்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான களத்தில் பஜாஜ் புதிய போட்டி ஒன்றை உருவாக்கி இருக்கிறது என்று சொல்லலாம், ஏற்கனவே Ola, Ather போட்டிக்களத்தில் இருந்தாலும் கூட பஜாஜ் பந்தயம் அடிக்கும் என கூறப்படுகிறது

பஜாஜ் சீட்டாக் 3501 மாடலின் விலை 1,27,243 ரூபாயில் இருந்து ஆரம்பம் ஆகிறது, இது மாநிலத்திற்கு ஏற்ப ஷோரூம்களுக்கு ஏற்ப விலை மாறலாம், On Road விலையிலும் ஒரு சில மாற்றங்கள் இருக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது, Pista Green, Hazelnut, Indigo Metallic, Brooklyn Black, Matte Scarlett Red போன்ற கலர்களில் பஜாஜ் சீட்டாக் 3501 மாடல் கிடைப்பதாக கூடுதல் தகவல்.