Amazfit -t-Rex 3 Specifications -அமேஸ்பிட் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் மற்றும் 40 நாள் பேட்டரி லைப் கொண்ட Amazfit T Rex 3 என்ற புதிய ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை மார்க்கெட்டிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது.
சரி, இந்த வாட்ச்சில் என்ன என்ன அம்சங்கள் இருக்கிறது?
1) 1.5 அமால்டு டிஸ்பிளே கொண்ட டச் ஸ்க்ரீன், மேல் இருக்கும் கண்ணாடியை உராய்வில் இருந்து பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரேட்ச் ரெசிஸ்சண்டும் இந்த வாட்ச் கொண்டு இருப்பதாக தகவல்.
2) டிஸ்பிளேவின் கிளாரிட்டி 480 * 480 என்றும், ஆக்சிடன்டல் டேமேஜ்களை தவிர்ப்பதற்காக, செஃப்போஸ் 4 வகை கொண்ட ஸ்ட்ராங்கான கொரில்லா கிளாஸ் அமைப்பும் இந்த வாட்ச் கொண்டு இருக்கிறது
3).வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் வாய்ஸ் கமாண்டுடன் கூடிய OpenAI's ChatGPT வசதியையும் இந்த வாட்ச் கொண்டு இருக்கிறது. இது இந்த வாட்சின் ஒரு மிகப்பெரிய சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.
4) ஜிபிஎஸ் வசதி உண்டு, நிரந்தரமான மற்றும் தற்காலிகமான கிளவுடு ஸ்டோரோஜ்கள் வாட்ச்களில் உண்டு.
5) 26 ஜிபி வரையிலான அதீத உள்ளடக்க ஸ்டோரஜும் இந்த வாட்சில் இருக்கிறது. வாட்சின் இயக்க முறைமை (OS) முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு அமைப்பை கொண்டு இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
6) 700 Mah உள்ளடக்க பேட்டரியை கொண்டு இருக்கும் இந்த வாட்ச் ஒரு முறை சார்ஜ் செய்தால், நார்மல் மோடில் கிட்ட தட்ட 27 நாட்கள் வரை இயங்கும் எனவும், பேட்டரி சேவர் முறைமையை பயன்படுத்தும் போது கிட்ட தட்ட அதிகபட்சமாக 40 நாட்கள் வரை வாட்ச் இயங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
7) சரி, எப்போது இந்த வாட்ச் மார்க்கெட்டுக்கு வருகிறது என்றால், வ்ருகின்ற செப்டம்பர் 27 ஆம் தேதி ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் மார்க்கெட்டுக்கு வர இருக்கும் இந்த வாட்சின் தற்போதைய இந்திய விலை 19,999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
இருபதாயிரத்திற்குள் அத்துனை அம்சங்களுடன் ஒரு ஸ்மார்ட் வாட்ச் வாங்க நினைப்பவர்களுக்கு Amazfit T Rex 3 ஒரு சிறந்த ஸ்மார்ட் வாட்ச் ஆக இருக்கும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை