செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள ரோபோ செல்லப்பிராணிகளின் மீது சீன இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். செல்லப்பிராணிகளின் இயல்பான செயல்பாடுகளை பிரதிபலிக்கக்கூடிய இந்த உயர் தொழில்நுட்ப ரோபோக்கள், பொதுவாக வளர்க்கப்படும் விலங்குகளுக்குப் பதிலாக இளையோரின் விருப்பமான தேர்வாக மாறி வருகின்றன.
மனிதர்களுடன் தொடர்பு கொள்ளும் திறனையும் உணர்வுகளை வெளிப்படுத்தும் தன்மையையும் கொண்டிருக்கும் இந்த செயற்கை செல்லப்பிராணிகள், நவீன செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகமான இந்த சாதனங்கள், தொடங்கி காலத்திலிருந்தே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.
மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு மனநிம்மதி பெறுவதற்காக இந்த இயந்திர செல்லப்பிராணிகளை அதிகமான இளைஞர்கள் வாங்கி வருகின்றனர். பராமரிப்பு செலவு இல்லாமல், உண்மையான செல்லப்பிராணிகளின் அனுபவத்தை வழங்கும் இந்த ரோபோக்கள், சீனாவில் விற்பனையில் சிறப்பாக முன்னிலை வகிக்கின்றன.