AI Helps To Avoid Surgery - சமீபத்தில் Grok AI குறித்த ஒரு மருத்துவ சம்பவம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது, அதாவது ஒரு பெண்ணின் அம்மா இணையத்தில் பகிர்ந்த பதிவு அது, அதாவது அவரது மகளுக்கு சமீபத்தில் ஒரு விபத்து நிகழ்ந்து இருக்கிறது, விபத்து நிகழ்ந்த போது அந்த பெண்ணின் மகள் முற்றிலுமாக அதில் இருந்து பாதுகாப்பாக வெளியேறிய போதும் கையில் மட்டும் ஏதோ அடி விழுந்து இருக்கிறது,
உடனடியாக ஒரு எலும்பு முறிவு டாக்டரை அணுகி விவரங்களை கூறி, எக்ஸ்ரே எல்லாம் எடுத்து பார்த்து விட்டு அந்த டாக்டரும் நார்மல் என்று கூறி வலிக்கு மட்டும் மருந்தை கொடுத்து அனுப்பி இருக்கிறார், ஒரிரு நாளில் வலி இன்னும் அதிகமாகி இருக்கிறது, கையெல்லாம் குளிர்ந்து போனது போல ஒரு உணர்வு இருந்து இருக்கிறது, டாக்டர் எல்லாம் சரி என்று சொன்னாரே ஏன் இப்படி ஆகிறது என தாய் பதறி போனார்.
என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த தாய், எலான் மஸ்க் அவர்களின் Grok AI சேட்டுக்கு, எக்ஸ்ரேக்களை அனுப்பி நிகழ்ந்ததை விவரித்து இருக்கிறார், எக்ஸ்ரேவை ஆராய்ந்த Grok AI அடிபட்ட இடத்தில் ஒரு சிறிய முறிவு இருப்பதை கண்டு பிடித்து, அதை தெளிவு படுத்தி, உடனடியாக இது சம்மந்தப்பட்ட டாக்டரை அணுகவும் என அறிவுறுத்தி இருக்கிறது.
உடனடியாக தாய் மகளை கூப்பிட்டுக் கொண்டு மற்றுமொறு மருத்துவரை அணுகி விவரத்தை கூறி இருக்கிறார், அவர் மறுபடியும் ஸ்கேன்ஸ், எக்ஸ்ரே எல்லாம் எடுத்து விட்டு, ஆம் சிறிய முறிவு இருக்கிறது, கொஞ்சம் தாமதாக வந்து இருந்தால் அறுவைச் சிகிச்சை வரை போய் இருக்க வாய்ப்புகள் இருந்திருக்கும், தற்போதே வந்து விட்டதால் எளிதாக சரி செய்து விடலாம் என கூறி இருக்கிறார்.
" அதாவது AI மருத்துவரால் கண்டு பிடிக்க முடியாத ஒரு முறிவை கண்டு பிடித்து, அறுவை சிகிச்சையும் தடுத்து இருப்பதன் மூலம் AI யின் பயன்பாடு மருத்துவ துறையிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது "