AI Detect Cancer - செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் புற்று நோயை முன்னதாகவே அறிய முடியும் என்றதொரு தகவல் வெளியாகி இருக்கிறது, அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
AI Detect Cancer - செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் என்பது தொழில்நுட்ப துறைகளை தான் பெரிதாக ஆட்கொள்ளும் என்றதொரு கருத்து ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தது, ஆனால் தற்போது அந்த கருத்து சுக்குநூறாக உடைக்கப்பட்டு இருக்கிறது, தற்போது செயற்கை நுண்ணறிவு என்பது இல்லாத துறையே இல்லை என்ற அளவிற்கு விரிவடைந்து விட்டது,
தொழில் நுட்பம், விண்வெளி, மீடியா, சோசியல் மீடியா, டெக்ஸ்டைல்ஸ், வாகன தயாரிப்புகள், ஈ காமர்ஸ், மருத்துவம் மற்றும் இதர சேவைகள் என செயற்கை நுண்ணறிவு என்பது பல துறைகளில் தற்போது பரவி கிடக்கிறது, எதிர்காலத்தில் மனிதனின் மூளைகளை எல்லாம் ஒன்றிணைக்கும் ஒரு மிகப்பெரிய கருவியாக AI செயல்படும் என்பதில் ஐயமில்லை,
சரி அந்த வகையில் AI க்கு புற்று நோய்க்கும் என்ன சம்மந்தம் என கேட்டால், AI மூலம் கேன்சர் செல்களை முன்னதாகவே கண்டறிய முடியும் என உறுதி செய்யப்பட்டு இருக்கிறது, CHIEF (Clinical Histopathology Imaging Evaluation Foundation) எனப்படும் புற்றுநோயை கண்டறியும் AI ஒன்று Harvard Medical School யால் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த AI க்கு 15 மில்லியன் Unlabeled Imagesகள் Feed செய்யப்பட்டுள்ளதாம், உலகளாவிய அளவில் 24 மருத்துவமனைகளில், பல்வேறு நோயாளிகளின் 19,400 இமேஜ்கள் பெறப்பட்டு இந்த AI மூலம் பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறதாம், 94% இந்த AI மூலம் புற்றுநோய் குறித்த சரியான தகவல்களை பெற முடியும் என உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
" இது புற்றுநோயை சரியாக முன்னதாக கண்டறிய மட்டும் உதவாமல், நோய் குறித்த தீவிரம், DNA மூலக்கூறு மாற்றங்கள், மருந்துகள் சரியாக செயல்படுகிறதா, கட்டிகள் உள்ள சரியான இடம் உள்ளிட்டவைகளும் தொகுத்தி வழங்கும் திறன் பெற்றதாக அறியப்படுகிறது "