• India
```

இரண்டு ஐஐடி பட்டதாரிகள்..டெல்லியில் ஆரம்பித்த உணவு டெலிவரி...Zomato என்னும் சர்வதேச நிறுவனமாக உயர்ந்தது எப்படி...?

Zomato Success Story | Zomato Startup Story

By Ramesh

Published on:  2024-12-01 01:56:23  |    128

Zomato Success Story - டெல்லியில் சிறிய அளவில் ஆரம்பித்த ஒரு நிறுவனம், ’Zomato’ என்னும் சர்வதேச நிறுவனம் ஆக உயர்ந்து எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Zomato Success Story - தீபிந்தர் கோயல் மற்றும் பங்கஜ் சத்தா என இரண்டு ஐஐடி பட்டதாரிகள், படிப்பை முடித்ததுமே இரண்டு பேருக்கும் 'Bain & Co’ வில் வேலை கிடைக்கிறது, ஆனால் அந்த வேலை அவர்களுக்கு திருப்தி தரவில்லை, அவர்களது எண்ணம் என்பது தொழில் ஆக இருந்தது, சரி என்ன தான் செய்வது என்று யோசித்து ஒரு முடிவு எடுக்கின்றனர், அது தான் உணவு டெலிவரி.

2008 ஆம் ஆண்டு 'Foodiebay' என்ற பெயரில் ஒரு உணவு டெலிவரி நிறுவனத்தை ஆரம்பிக்கின்றனர், இருவருமே களத்தில் இறங்கி ஆர்டர் செய்பவர்களுக்கு டெலிவரி செய்து வந்தனர், கொஞ்ச நாட்களிலேயே இவர்களின் செயல்பாடுகள் பிரபலம் ஆக, இந்த 'Foodiebay' மும்பை, கல்கத்தா, ஹரியானாவிற்கும் விரிவடைகிறது, கொஞ்சம் கொஞ்சமாக 'Foodiebay' வளர்ச்சியடைகிறது.



 Zomato Startup Story-அபரித வளர்ச்சிக்கு பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு பின் 'Foodiebay' என்ற பெயரானது ‘Zomato' என மாற்றப்படுகிறது, அதுவரை ஜெட் வேகத்தில் சென்று கொண்டு இருந்த 'Zomato' வின் வளர்ச்சி அதற்கு பின் மின்னல் வேகத்தில் வளர துவங்கியது, தேசத்தின் பல மூலைகளில் உள்ள உணவு நிறுவனங்களும் 'Zomato' வின் இணைய முற்பட்டனர், டெலிவரி தேசம் எங்கும் விரிவடைந்தது.

முதலீட்டாளர்களும் குவிய ஆரம்பித்தனர், சர்வதேச அளவிலும் நிறுவனங்கள் விரிவடைய துவங்கியது, 24 நாடுகளில், 10,000 க்கும் மேற்பட்ட நகரங்களை மையப்படுத்தி உணவுகளை டெலிவரி செய்து வரும் ‘Zomato' தற்போது Grocery டெலிவரிகளிலும் ஈடுபட்டு வருகிறது, நிகழ் வருடத்தில் மட்டும் ரூ 12,114 கோடி வருமானம் ஈட்டி இருக்கும் 'Zomato' வின் வெற்றிக்கும் அவர்களின் மார்க்கெட்டிங் தான் காரணம் என கூறப்படுகிறது.

" இதுவே போதும் என தீபிந்தர் கோயல் மற்றும் பங்கஜ் சத்தாவும் முடங்கி Bain & Co விலே இருந்து இருந்தால், இன்று Zomato என்ற நிறுவனம் இருந்து இருக்காது, உச்சத்தை தொட வேண்டுமானால், உங்களுக்கு முன்னால் இருக்கும் தடைகள் எதுவாயினும் உடைத்து எறிந்து விட்டு களத்தில் இறங்க வேண்டும் என்பது தான் Zomato நமக்கு கற்று தரும் பாடம் "