• India
```

சென்னை சில்க்ஸ்...வெறும் 100 சதுர அடியில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம்...சாம்ராஜ்யமானது எப்படி...?

The Chennai Silks Success Story

By Ramesh

Published on:  2025-01-04 19:57:12  |    222

The Chennai Silks Success Story - வெறும் 100 சதுர அடியில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு காதி விற்பனை நிறுவனம் சாம்ராஜ்யமானது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

The Chennai Silks Success Story - குழந்தை வேலு, திருப்பூர் அருகே உள்ள ஒரு சாதாரணமாக கிராமத்தை சேர்ந்தவர் தான், பெரிய படிப்பெல்லாம் இல்லை, ஆனாலும் சிறு குறு தொழில் புரிந்து வந்தார், அந்த காலத்தில் சுதந்திர போராட்டத்திற்கு பிறகு காதி உடை தான் பிரபலம், அந்த காதி உடையை தான் குழந்தை வேலு சிறு சிறு சந்தைகளுக்கு நேரடியாக சென்று சந்தைப்படுத்தி வந்தார்.

ஒரு கட்டத்திற்கு பின்னர் எத்துனை நாள் தான் சந்தைக்கு துணிகளை தூக்கி தூக்கி சென்று காதிகளை விற்க முடியும் என யோசித்து 100 சதுர அடியில் ஒரு காதி விற்பனை மையத்தை துவங்குகிறார், அவருடைய விற்பனை பாணியும், துணியின் தரமும் மக்களுக்கு மிகவும் பிடித்து போகவே, அவருடைய அந்த நிறுவனம் விற்பனையில் களை கட்டவும் துவங்கிறது. கல்லாவும் நன்கு கட்டியது.




அடுத்த ஒரிரு வருடங்களிலேயே தமிழகம் முழுக்க 12 குட்டி குட்டி விற்பனை மையங்களை தோற்றுவித்தார், 1978 யில் தான் வாழ்ந்த திருப்பூரில் ஒரு மல்டி பிராண்ட் ஷோ ரூமை தோற்றுவித்தார், அதற்கு குமரன் சில்க்ஸ் என்ற பெயரையும் வைத்தார், அவர் ஆரம்பித்து சிறு குறு விற்பனை மையங்களும் சரி, மல்டி பிராண்ட் ஷோரூமும் சரி இரண்டுமே அவருக்கு நல்ல வருமானத்தை கொடுத்து இருக்கின்றன.

பின்னர் 2000 காலக்கட்டங்களில் சென்னையில் 1,25,000 சதுர அடியில் ஒரு மிகப்பெரிய ஜவுளிக் கடையை தோற்றுவிக்கிறார், நிறுவனம் சிறப்பாக செயல்படுகிறது, அது வரை குமரன் சில்க்ஸ் ஆக இருந்த ஷோரூம்கள் அந்த ஷோரூமிற்கு பின்னர் சென்னை சில்க்ஸ் ஆக மாறியது, இன்று திருச்சி, திருநெல்வேலி, கோவை, சென்னை என பல முக்கிய மாவட்டங்களிலும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு இருக்கிறது, 

" அன்று 100 சதுர அடியில் ஒரு சிறிய காதி விற்பனை மையமாக இருந்த நிறுவனம், இன்று 5 தலைமுறைகளாக தமிழகத்தின் மிகச்சிறந்த டெக்ஸ்டைல் நிறுவனமாக செயல்பட்டு கோடிகளில் விற்பனைகளை செய்து வருகிறது, உழைப்பும், தொழில் மீதான நம்பிக்கையும் இருந்தால் 100 சதுர அடியும் சாம்ராஜ்யமாகும் என்பதற்கு சென்னை சில்க்ஸ் சிறந்த சான்று "