• India
```

ஆனந்த விலாஸ் டு திண்டுக்கல் தலப்பாக்கட்டி...ஒரு பிரியாணி கடை எப்படி சர்வதேசம் வரை சென்றது...?

Dindigul Thalappakatti Success Story

By Ramesh

Published on:  2025-01-08 15:00:17  |    206

Dindigul Thalappakatti History - திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஹோட்டலின் உண்மையான வரலாறு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Dindigul Thalappakatti Success Story - 'அன்பு கூட்டி, பாசம் கூட்டி, சமைச்சது திண்டுக்கல்லு தலப்பாகட்டி' என்ற விளம்பர பாடலை அறியாதோர் யாரும் இருக்க மாட்டார்கள், அத்தகைய திண்டுக்கல் தலப்பாகட்டி வரலாறு குறித்து அறிய வேண்டுமானால் ஒரு 67 வருடங்கள் பின்னுக்கு செல்ல வேண்டும், நாகசாமி நாயுடு, அவர் தான் அந்த ஆனந்த விலாஸ் பிரியாணி கடையின் முதலாளி, அன்றைய தினம் திண்டுக்கல்லில் பிரியாணி என்றால் ஆனந்த விலாஸ் தான், 

அதிலும் வாடிக்கையாளர்களை நாகசாமி நாயுடு நடத்தும் விதம் அவ்வளவு அழகாக இருக்குமாம். எப்போதுமே தலையில் தலைப்பாகையுடன் தான் இருப்பாராம், அதனால் தலப்பாகட்டி கடை என வாடிக்கையாளர்கள் கூறி கூறி, நாளடைவில் திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி கடை என்றே ஆனது, அவரது பிரியாணியை சுவைப்பதற்கு என்றே வெளி மாவட்டங்களில் இருந்து எல்லாம் ஆட்கள் வருவார்களாம், 



முதலில் அவர் ஒரு வெற்றிலை கடையை தான் துவங்கினார், பின்னர் ஒரு 5 பேர் அமரும் வகையில் ஒரு ஹோட்டல் கிடைக்கிறது, தனது மனைவியின் கை வண்ணத்தில் பிரியாணி தயாரித்து விற்பனை செய்கிறார், நாளடைவில் அந்த விற்பனை சூடுபிடித்து இன்று தலப்பாகட்டியாக வளர்ந்து நிற்கிறது, தலப்பாகட்டியின் சுவைக்கு காரணம் அவர்கள் பயன்படுத்தும் அனைத்துமே முதல் தரம்.

சமையலுக்கு தேவையான பொருள்கள் முதல் இறைச்சி வரை அனைத்துமே முதல் தர பொருள்களை வாங்கி தான் பிரியாணியை செய்வார்களாம், இது இன்று ஆரம்பிக்கப்பட்ட வழக்கம் அல்ல, நாகசாமி நாயுடு அவர்கள் துவங்கி வைத்த வழக்கம், அது இன்னமும் பின்பற்றப்பட்டு வருகிறது, உலகளாவிய அளவில் இன்று திண்டுக்கல் தலப்பாகட்டி 102 க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டு இருக்கிறது.

" அதில் 15 கிளைகள் வெளிநாடுகளில் இருப்பதாக தகவல், இன்று தலப்பாகட்டியின் நெட்வொர்த் மட்டும் 1000 கோடியை நெருங்கும் என கூறப்படுகிறது "