Washing Powder Nirma History - அன்று வீடு வீடாக சென்று கதவைத் தட்டி டிடர்ஜெண்ட் விற்ற கர்சன் பாய், இன்று இந்தியாவின் பில்லியனர்களுள் ஒருவராக இருக்கிறார்.
Washing Powder Nirma History - 1945 காலக்கட்டத்தில் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர் தான் இந்த கர்சன் பாய் படேல், 21 வயதில் வேதியியல் பிரிவில் இளங்கலை பட்டத்தை முடித்து விட்டு, ஒரு பருத்தி ஆலையில் சிறிய வேலைக்கு சேருகிறார், அவர் அங்கு வாங்கும் சம்பளம் என்பது அவருக்கும், அவரது குடும்பத்தின் நிர்வாகத்திற்கும், போதுமானதாக இல்லை, ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறார்.
1969 ஆம் ஆண்டு தான் தனது வீட்டிலேயே ஒரு தயாரித்து பல கலவைகளை தொகுத்து சோப்பு பொடி ஒன்றை தயாரிக்கிறார், அலுவக வேலை முடிந்ததும், ஒரு சைக்கிளை எடுத்துக் கொள்வோர், தான் தயாரித்த சோப்பு பொடிகளை கையில் எடுத்துக் கொண்டு தெரு தெருவாக, வீடு வீடாக சென்று விற்பனையை செய்து வந்தார், கிட்டத்தட்ட 15 கி.மீ வரை சைக்கிளிலேயே சென்று சோப்பு பொடியை விற்று வந்து இருக்கிறார்.
அன்று சந்தையில் ஒரு கிலோ பிராண்டடு சோப்பு பொடி என்பது கிலோ 13 ரூபாயாக இருந்தது, ஆனால் கர்சன் பாய் படேல் விற்ற சோப்பு பொடியின் விலை என்பது அதில் நான்கில் ஒரு பங்கு தான், அதாவது ஒரு கிலோ என்பது வெறும் மூன்று ரூபாய்க்கு விற்று வந்தார், எளிய மக்களுக்கு ஏற்ற விலை என்பதால் மக்கள் கர்சன் பாயை தேடி வந்து வாங்க ஆரம்பித்தனர்.
ஒரு கட்டத்திற்கு பின் தனது அலுவலக வேலையை விடுத்து, முழுவதும் தொழிலில் களம் இறங்கினார், தனது சோப்பு பொடிக்கு தனது பெயரான நிர்மா என்ற பெயரை வைத்தார், பட்டி தொட்டி எங்கும் நிர்மா வாஷிங் பவுடர் என்ற பெயரை தனது வித்தியாசமான விளம்பரங்களைக் கொண்டு சேர்த்தார், 2004 ஆம் ஆண்டிலேயே 14,000 ஊழியர்களை கொண்டு தனது தொழிற்சாலையை இயக்கி வந்தார்.
" நிர்மா குளியல் சோப்கள், நிர்மா பாத்ரூம் க்ளீனர்கள், நிர்மா ப்ரீமியம் சோப்கள் என பல முன்னனி தயாரிப்புகளை சந்தைகளில் முன்னிலைப்படுத்தி தற்போது கிட்டத்தட்ட 7000 கோடி சொத்து மதிப்பிற்கு தலைமையாக வளர்ந்து நிற்கிறார்கள் "