• India
```

Dabur History | சிறிய ஆயுர்வேத நிறுவனம்...பில்லியன் டாலர் நிறுவனமாக மாறியது எப்படி...?

Dabur History Tamil

By Ramesh

Published on:  2024-12-20 22:23:45  |    475

Dabur History Tamil - ஓரு சிறிய குடிசையில் ஆரம்பிக்கப்பட்ட சிறிய ஆயுர்வேத நிறுவனம், எப்படி டாபர் எனப்படும் பில்லியன் டாலர் நிறுவனமாக மாறியது என்பது குறித்து பார்க்கலாம்.

Dabur History Tamil - டாபர் என்னும் சாம்ராஜ்யம் உருவானது எல்லாம் டாக்டர் பர்மன் என்னும் ஒரு புள்ளியில் தான், ஒரு 10 க்கு 10 இடத்தில் ஆயுர்வேத மருத்துவத்தை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி வந்தவர் தான் பர்மன், 1884, அன்று சிறிய சிறிய நோய்களுக்கு கூட மருந்துகள் இல்லாமல் மக்கள் கொத்து கொத்தாய் இறந்து வந்தனர், ஆனால் அதற்கெல்லாம் பர்மன் தீர்வு வழங்கி வந்தார்.

மார்க்கெட்டில் கிடைக்காத மருந்துகளை எல்லாம் தானே தயாரித்து குறைந்த விலையில் விநியோகித்து வந்தார், பர்மன் அவர்களின் மருந்துக்காக மக்களின் கூட்டம் அலை மோதியது, தொடர்ந்து பல்வேறு நோய்களுக்கான ஆயுர்வேத மருந்துகளை தயாரிக்க ஆரம்பித்தார், மக்களிடம் வரவேற்பு அதிகமாக இருந்ததால் 1896 ஆம் ஆண்டு ஒரு மிகப்பெரிய மருந்து உற்பத்தி மையத்தை உருவாக்கினார்.



1900 களில் ஆயுர்வேத மருந்து சந்தைகளில் டாபர் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்தது, எந்தெந்த நோய்களுக்கெல்லாம் இந்தியாவில் மருந்து இல்லையோ அதுவெல்லாம் பர்மன் அவர்களின் டாபர் நிறுவனத்திடம் இருந்தது, 1919 ஆம் ஆண்டு தயாரிக்கும் மருந்துகள் மற்றும் புதிய மருந்துகளை பரிசோதிக்கும் பொருட்டு, தனியாக ஒரு ஆய்வகம் அமைக்கப்பட்டது.

நிறுவனம் பீகார் மற்றும் தென் கிழக்கு பகுதிகளில் விரிவு படுத்தப்பட்டது, டாபரின் தயாரிப்புகள் தேசம் முழுவதும் சந்தைப்படுத்தப்பட்டன, 1936 ஆம் ஆண்டு டாபர் முழுக்க முழுக்க ஒரு அங்கீகரிக்கப்பட்ட கம்பெனியாக உருவெடுத்தது, தொடர்ந்து ஆயுர்வேத மருந்துகள் சந்தையில் சிறப்பாக செயல்பட்டு ஒரு குறிப்பிட்ட உயரத்தை அடைந்தது, 2000 காலக்கட்டத்திலேயே 1000 கோடி வருமானம் பார்த்தது.

" ஒரு சிறிய ஆயுர்வேத நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டு இன்று சர்வதேச நிறுவனமாக உருவெடுத்து இருக்கும், டாபர் நிறுவனத்தின் வருமானம் பில்லியன் டாலர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது "