• India
```

டீ கடையில் ஆரம்பித்த பயணம்...22 நாடுகளில் 111 ஹோட்டல்கள்...எப்படி உருவானது சரவணபவன்...!

Saravana Bhavan History

By Ramesh

Published on:  2024-12-31 16:41:41  |    163

Saravana Bhavan History - இன்று உலகமெங்கும் பரவி இருக்கும் பிரபல சரவணபவன் ஹோட்டல் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Saravana Bhavan History - தென் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் புன்னையடி என்ற ஊரில் பிறந்தவர் தான் ராஜகோபால், இவரது அப்பா ஒரு வெங்காய விவசாயி, வெங்காயத்தை விளைவித்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட சந்தைகளுக்கு கொடுத்து வந்தனர், ராஜ கோபால் அவர்களும் முதலில் அப்பாவுடன் இணைந்து இந்த வெங்காயங்களை சந்தைப்படுத்துவதில் தான் ஈடுபட்டு வந்தார்.

பின்னர் விவாசயம் கொஞ்சம் கொஞ்சமாக பின் தங்கவே,தனியாக டீ கடை, மளிகை கடைகளில் கொஞ்ச நாளுக்கு தினசரி கூலியாக சேர்ந்து வேலை பார்த்து வந்தார், அந்த சமயத்தில் ஏதாவது தொழில் துவங்க வேண்டும் என்ற ஆசை ராஜ கோபால் அவர்களுக்கு இருந்தது, பின்னர் ஜோசியம் கேட்கவே, தீயை மையப்படுத்தி ஏதாவது தொழில் செய்யுங்கள் என ஜோதிடக்காரர் அறிவுறுத்தி இருக்கிறார். 



முதலில் அவர் வைத்தது என்னவோ மளிகை கடை தான், பின்னர் தீயை சம்பந்தப்படுத்தி 1981 ஆம் ஆண்டு தனது முதல் ஹோட்டலை சென்னையில் துவங்குகிறார், அங்கு சுடப்படும் தோசை வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிரியம் ஆகி போகிறது, அந்த தோசைக்காகவே மக்கள் கூட்டம் அலை மோதியது, அவ்வாறாக தனது ஹோட்டலை கொஞ்சம் கொஞ்சமாக ராஜகோபால் விரிவு படுத்தினார்.

முதலில் சென்னையின் பல இடங்களில் விரிவுபடுத்தியவர், படிப்படியாக தமிழகம் முழுக்க, இந்தியா முழுக்க, ஒரு சில வெளிநாடுகளிலும் தனது பிராண்ட் ஆன சரவணபவனை நிறுவினார், அவரது தொழில் யுக்தி என்பது சுவை, நன்கவனிப்பு இந்த இரண்டிலும் அதிக கவனம் செலுத்தினார், அது அவருக்கு பலன் கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும், இன்று 22 நாடுகளில் 111 ஹோட்டல்கள் இவர்களது குடும்பத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

" உழைப்பு, தரம், நன்கவனிப்பு என இந்த மூன்றும் இருந்தால் எத்தகைய தொழிலிலும் சிறக்க முடியும் என்பதற்கு சரவணபவன் ராஜகோபால் அவர்கள் எடுத்துக்காட்டாய் விளங்குகிறார், ஒரு சில குற்றவியல் வழக்குகள் சரவணபவன் ஹோட்டல்களில் வீழ்ச்சிக்கு வழி வகுத்தாலும் கூட அவர்கள் அடைந்த உயரம் என்பது அசாத்தியமானது "