• India
```

அன்று ஒரு கடையின் க்ளீனர்...இன்று பில்லியனர்... WhatsApp யை கண்டு பிடித்த ஜேன் கோமின் வெற்றிப் பயணம்...!

WhatsApp Founder Jan Koum Inspirational Story

By Ramesh

Published on:  2024-12-05 23:05:46  |    111

WhatsApp Founder Jan Koum Inspirational Story - WhatsApp யை கண்டு பிடித்த நிறுவனர்களுள் ஒருவரான ஜேன் கோமின் வரலாறு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

WhatsApp Founder Jan Koum Inspirational Story - ஜேன் கோம் உக்ரைனின் ஒரு ஏழ்மையான பெரும் வசதிகள் இல்லாத கிராமத்தை சார்ந்தவர், ஒரு நடுத்தர குடும்பவாதி தான், 1992 யில் கலிபோர்னியாவிற்கு இடம் பெயருகிறார், சிறு வயதிலேயே புரோகிராமிங்கில் அதிக நாட்டம் கொண்டவர், பெரும் வசதி ஏதும் இல்லாததால் படித்துக் கொண்டே அங்கு இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் கடைகளில் பகுதி நேர வேலையாக க்ளீனிங் வேலைக்கு செல்வார்.

பசியும் வறுமையும் வாட்டினாலும் கூட படிப்பை அவர் ஒருபோதும் கைவிடவில்லை, அதை நன்கு இறுகப்பற்றிக் கொண்டார், ஏழைகளுக்கும் வறுமையில் உழல்பவர்களுக்கும் அரசு வழங்கும் சலுகை ரேசன் பொருள்களை வாங்கி வைத்துக் கொண்டு தினசரி நாட்களை கடந்து கொண்டு இருந்தார், பின்னர் 18 வயதில் சான் ஜோஸ் மாநில பல்கலைக் கழகத்தில் இணைந்து கல்லூரி படிப்பை துவங்கினார்.



வெறித்தனமாக படித்தார், படித்து முடித்ததுமே யர்னஸ் & யங் குழுமத்தில் வேலை கிடைக்கிறது, வேலை ஒரு பக்கம் வறுமையையும் பசியையும் அழித்தாலும், இன்னொரு பக்கம் அவரின் முயற்சிக்கும் மூளைக்கும் பசி எடுத்துக் கொண்டே இருக்கிறது, அப்போது தான் அவருக்கு ஒரு Chat செயலி உருவாக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது. அதை தனது நண்பர் பிரையன் ஆக்டன் என்பவரிடமும் கூறுகிறார்.

பின்னர் இருவரும் இணைந்து முயற்சி எடுக்கின்றனர், கம்பெனியில் பணி புரிவது அவர்களது கண்டு பிடிப்பிற்கு இடையூறாக இருந்ததால் இருவரும் பணியை விட்டு விலகி முழு மூச்சாய் WhatsApp தயாரிப்பதில் ஈடுபட்டனர், 2009 பிப்ரவரியில் தங்களது தயாரிப்பை வெளியிடுகின்றனர், வெளியிட்ட குறுகிய காலத்தில் WhatsApp பெரும் உயரத்தை அடைந்தது. பயனர்கள் அதிவேகமாக அதிகரித்தனர்.



WhatsApp யின் அபரித வளர்ச்சியை கண்ட பேஸ்புக்கின் நிறுவனர் மார்க்கிற்கு WhatsApp யை வாங்கலாம் என்ற ஐடியா வருகிறது, பின்னர் ஒரு நாள் ஜேன் கோமை தனது வீட்டிற்கு அழைக்கிறார், பல சந்திப்புகள் நிகழ்கிறது, ஒரு கட்டத்திற்கு பின்னர் ஜேன் கோம், மார்க் சூக்கர் பெர்க்கின் டீலை ஏற்றுக் கொள்கிறார், 19 பில்லியன் அமெரிக்க டாலருக்கு WhatsApp ஆனது மார்க் சூக்கர் பெர்க்கால் வாங்கப்பட்டது.

" இந்த வாட்சப்பை வாங்கிய பேஸ்புக் நிறுவனம் தான் ஒரு காலத்தில் ஜேன் கோம் மற்றும் அவரது நண்பரான பிரையன் ஆக்டனின் வேலைக்கான அப்ளிகேசனை நிராகரித்ததாம், நிராகரித்தவர்களையே டீல் பேச வைத்தது தான் இதில் ட்விஸ்ட், க்ளீனர் டு பில்லியனர், நிச்சயம் இது தான் ஒரு உண்மையான வெற்றி சரித்திரமாக இருக்க முடியும் "