• India
```

மாதம் ரூ 10000 சம்பளத்தில் இருந்து கொண்டு...4000 கோடி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய...வினிதா சிங்...!

Vineeta Singh Success Story

By Ramesh

Published on:  2025-01-27 14:57:47  |    69

Vineeta Singh Success Story - 1 கோடி சம்பளத்தை விட்டு விட்டு, மாதம் ரூ 10000 சம்பளத்தில் இருந்து கொண்டு 4000 கோடி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய வினிதா சிங் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Vineeta Singh Success Story - பொதுவாக இரண்டு தயாரிப்பு சம்பந்தப்பட்ட துறைகள் எப்போதுமே உலகளாவிய அளவில் ஒரு அபரித வளர்ச்சியில் இருந்து வருகின்றன, அது என்ன துறைகள் என்று கேட்டால் ஒரு ஹெல்த் மற்றும் மருத்துவம் ரிலேட்டடான தயாரிப்புகள், இன்னொன்று அழகு சாதன தயாரிப்புகள், சரி ஏன் இந்த இரண்டு மட்டும் என்றால் பயனர்கள் விலை கேட்காமல் வாங்க கூடிய பொருட்கள் இந்த இரண்டு மட்டும் தான்.

அதனால் தான் எந்த ஒரு நிறுவனமும், தனது அபரித வளர்ச்சிக்கு அழகு துறையையோ, மருத்துவ தயாரிப்புகள் துறையையோ தேர்ந்து எடுக்கும் போது, சரிவையே சந்திக்காமல் தொடர்ந்து முன்னேறி செல்கின்றன, அந்த வகையில் சுகர் காஸ்மெட்டிக்ஸ் துறையில் அபரித வளர்ச்சி அடைந்து வரும் தொழில் முனைவோர் வினிதா சிங் குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.



டெல்லியில் பள்ளிப்படிப்பு, ஐஐடி சென்னையில் எலக்ட்ரிக்கல் இன்ஞ்சினியரிங், அகமதாபாத் IIM யில் MBA, என டாப் கிளாஸ் ஆக படித்த வினிதா சிங்கிற்கு ஒரு பிரபல வங்கியில் வருடத்திற்கு 1 கோடி சம்பளத்தில் வேலை கிடைக்கிறது, ஆனால் அதை எல்லாம் விட்டு விட்டு ரூ 10,000 சம்பளத்தில் வீட்டில் இருந்தே பணி புரிந்து கொண்டு தனது தொழிலுக்கு அடித்தளம் இட்டு இருக்கிறார்.

முதல் இரண்டு முயற்சிகள் தோல்வி, மூன்றாவது முயற்சியில் தன்னை முழுவதும் சுகர் காஸ்மெட்டிக்ஸ் துறையில் ஈடுபடுத்திக் கொண்டு கடுமையாக உழைத்தார், 2007 யில் ஆரம்பித்த அவரின் தொழில் ஆசைக்கு 2015 யில் சரியான வாய்ப்பு கிடைத்தது, பிரபல நிறுவனத்திடம் இருந்து 50 மில்லியன் டாலர் முதலீடு வரவே அதை விடாப்பிடியாய் பிடித்துக் கொண்டு தற்போது 4000 கோடி ஸ்தாபனமாக ஆக்கி இருக்கிறார்.

" வினிதா சிங், அவர் தொழிலில் மட்டும் கெட்டிக்காரர் அல்ல, படிப்பிலும் கோல்டு மெடலிஸ்ட், விளையாட்டு துறையிலும் அவர் படு சுட்டி, 8 வருடம் அவர் விருப்பத்தின் மீது அவர் போட்ட உழைப்பு தான், இன்று அவரை ஒரு சாம்ராஜ்யத்தில் உட்கார வைத்து இருக்கிறது எனலாம் "