• India
```

பாலாஜி ஸ்நாக்ஸ்...ரூ 10000 முதலீட்டில் ஆரம்பித்து...5000 கோடி சாம்ராஜ்யத்தை உருவாக்கியது எப்படி...!

Success Story Of Balaji Wafers

By Ramesh

Published on:  2025-02-06 12:01:49  |    44

Success Story Of Balaji Wafers - பத்தாயிரம் ரூபாய் முதலீட்டில் ஆரம்பித்து ஐந்தாயிரம் கோடி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய சந்துபாய் விரானி குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சந்துபாய் விரானி, கையில் ஒன்றுமே இல்லாமல் ஒரு சிலரால் தான் ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்க முடியும், விரானி அந்த வகை தான், அன்று அவர் கையில் ஒரு மாதத்திற்கான செலவு பணத்தை விட ஒன்றுமே கிடையாது, சாதாரண விவசாய குடும்பத்தை சார்ந்தவர் தான், பல நிதி நெருக்கடிகளை தனது சிறு வயதிலேயே சந்தித்தவர் தான் விரானி. 

ஆனாலும் அவரிடம் தொழில் ஆர்வம் இருந்தது, அங்கும் இங்குமாக சகோதரர்களோடு இணைந்து ஒரு 20,000 ரூபாயை புரட்டி ஒரு விவசாய பொருள்கள் விற்கும் ஒரு கடையை வைத்தார், அது இரண்டு வருடங்கள் கூட நீடிக்காமல் அவரின் குடும்பத்தை இன்னும் மிக மோசமான பொருளாதார நிலைக்கு தள்ளியது, தொழிலில் முதலீடு போட்டு தோற்றதும் ஊரே அவரை இகழ்ந்து தள்ளியது.



ஆனாலும் அவர் துவண்டு விடவில்லை, மீண்டும் ஒரு 10,000 ரூபாயை புரட்டி ஒரு ஷெட் அமைத்து கொஞ்சம் உருளைக்கிழங்குகளை மொத்தமாக கொள்முதல் செய்து அதில் இருந்து சிப்ஸ் தயாரித்து சந்தைப்படுத்தினார், தொழில் ஒரு பக்கம் வைத்துக் கொண்டு அப்போதைய குடும்ப சூழலை சரி செய்ய சர்வர், பெயிண்டிங், போஸ்டர் ஒட்டுதல் என பல வேலைகளுக்கு செல்வார்.

ஒரு கட்டத்தில் தொழில் பிக் அப் ஆகவே பல வகையான சுவை உடைய உருளைக்கிழங்கு சிப்ஸ்களை தயாரித்து கவர்ச்சிகரமாக பேக்கிங் செய்து தேசம் முழுக்க சந்தைப்படுத்தினார், தரமும் சுவையும் மேலோங்கி நின்றதால் பாலாஜி நிறுவனம் வேகமாக வளர துவங்கியது, 1974 முதல் 89 வரை வீட்டில் தான் சிப்ஸ் தயாரிக்கப்பட்ட வந்தது, 1989 யில் தொழிற்சாலையை அமைத்தனர்.

" அப்போது இருந்து வேகமான வளர்ச்சி தான், தற்போது விரானியின் நிறுவனம் வருடத்திற்கு 5,500 கோடி வரை வருமானம் ஈட்டி வருகிறது, கையில் எதுவுமே இல்லை என்றாலும் கூட நம்பிக்கையும் உழைப்பும் இருந்தால் எளிதில் சாதிக்க முடியும் என்பதற்கு விரானி சான்றாக அமைகிறார் "