• India
```

74 வயதில் YouTuber...1.76 மில்லியன் பயனர்களோடு...மாதம் 6 இலட்சம் வருமானம் ஈட்டும் பாட்டி...!

Story Of Aapli Aaji

By Ramesh

Published on:  2025-02-15 21:23:26  |    57

Story Of YouTuber Suman Dhamane - YouTube யில் 1.76 மில்லியன் பயனர்களுடன் மாதம் 6 இலட்சம் வருமானம் ஈட்டும் 74 வயது சுமன் தாமனே குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சுமன் தாமனே, வயது 74 இருக்கும், மஹாராஸ்டிராவின் அகில்யா நகரை சேர்ந்தவர், இந்த இணையம், சமூக வலைதளம் குறித்த அடிப்படையான புரிதல்கள் கூட இல்லாதவர், ஒரு நாள் அவரது பேரன் யாஷ் பதாக் அவரிடம் பாவ் பஜ்ஜி செய்ய சொல்லி கேட்டு இருக்கிறார், சுமன் தாமனேவும் செய்து கொடுக்கவே அது யாஷ் பதாக்கிற்கு ரொம்பவும் பிடித்து போனது.

அந்த நிமிடம் யாஷ், தனது பாட்டியின் சமையல் குறிப்புகளை வீடியோவாக போடலாம் என முடிவு எடுக்கிறார், Aapli Aaji என்ற பெயரில் ஒரு YouTube சேனல் ஒன்றை ஆரம்பித்து, சுரைக்காய் குழம்பு தயாரித்தலுக்கான முதல் குறிப்பை வீடியோவாக பதிவு இடுகின்றனர், எடுத்த முதல் வீடியோவே ஒரிரு நாட்களில் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை அடைந்தது.



யாஷ் இதனை பயன்படுத்திக் கொண்டு தனது பாட்டியை வித விதமாக செய்ய சொல்லி வீடியோவாக பதிவேற்றினார், சுமன் தாமனேவின் சமையல் குறிப்புகள் பயனர்கள் அனைவரையும் ஈர்க்கவே சேனல்களை தேடி தேடி பார்க்கும் பயனர்கள் அதிகரித்தனர், குறிப்பிட்ட சிறுது மாதங்களிலேயே ஒரு வருவாய் ஈட்டும் சேனலாக Aapli Aaji மாறியது.

தற்போது இவர்களது சேனல் 2 மில்லியன் பயனர்களை நெருங்கி கொண்டு இருக்கிறது, மாதம் 6 இலட்சம் வரை வருமானம் ஈட்டி வருகின்றனர், பாரம்பரிய மஹாராஸ்டிரா சமையல்களை சுமன் தாமனே உதவியுடன் யாஷ் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார், இத்தோடு மட்டும் அல்லாமல் விதம் விதமான குழம்பு மசாலாக்களையும் சுமன் தாமனே உதவியுடன் தயாரித்து சந்தைப்படுத்து வருகிறார்.