• India
```

சாதாரண தள்ளுவண்டி கடை...பிரியாணி சாம்ராஜ்யம் ஆனது எப்படி...சேலம் RR பிரியாணியின் வரலாறு...!

Salem RR Biryani Success Story

By Ramesh

Published on:  2025-02-18 22:11:02  |    47

Salem RR Biryani Success Story - தள்ளுவண்டி கடையில் ஆரம்பித்து இருபதுக்கும் மேற்பட்ட பிரியாணி சாம்ராஜ்யத்தின் கிளைகளை உருவாக்கி இருக்கும் தமிழ் செல்வன் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சேலம் RR பிரியாணி என்னும் சாம்ராஜ்யம் ஒன்றும் அவ்வளவு எளிதாக உருவாகி விடவில்லை, அதற்காக தமிழ்ச்செல்வன் போட்ட உழைப்பு என்பது அளப்பரியது, சிறு வயதிலேயே தாயை இழந்தார், தந்தை மதுவுக்கு அடிமை, அக்காவால் வளர்க்கப்பட்ட தமிழ்ச்செல்வன் சிறு வயதிலேயே வேலைக்கு செல்ல வேண்டிய சூழல், ஒரு டீக்கடையில் டீ கிளாஸ் கழுவியது தான் அவரின் முதல் வேலை.

டீ கிளாஸ் கழுவி கிடைத்த காசில் ஒரு வேளை கூட அவரால் உணவு வாங்கி உண்ண முடியவில்லை, பின்னர் அங்கி இருந்து நகர்வதாக முடிவெடுத்து 13 வயதில் சென்னை வருகிறார், ஏதாவது ஹோட்டலில் வேலை பார்த்தால் 3 வேளை உணவு கிடைக்கும் என்பதனால் ஹோட்டலில் தட்டு கழுவும் வேலைக்கு சேர்ந்து அதே ஹோட்டலில் சர்வர் ஆகவும் ஆனார்.



பின்னர் ஒரு தொழில் ஆரம்பிக்கலாம் என நினைத்து சில நண்பர்களுடன் இணைந்து தள்ளுவண்டி கடையில் பாசுமதி அரிசியில், பிரியாணி செய்து விற்பனை செய்தார், தமிழ்ச்செல்வனின் கைப்பக்குவம் சென்னையையே அவர் பக்கம் இழுத்தது, வாடிக்கையாளர்கள் பலரும் அவரை கடை போடும்படி வற்புறுத்தவே அன்று ஆரம்பித்தது சேலம் RR பிரியாணியின் முதல் கிளை.

தொடர்ந்து வியாபாரம் பெருகவே ஒரு கிளை இரண்டாக, இரண்டு கிளை நான்காக என தற்போது தமிழகம் முழுக்க 20க்கும் மேற்பட்ட கிளைகள் வைத்து கோடிகளில் வருமானம் பார்த்து வருகிறார், வடக்கே சென்னை முதல் தெற்கே திருநெல்வேலி வரை தங்களது கிளைகளை விரிவுபடுத்தி ஒரு பிரியாணி சாம்ராஜ்யத்தை எழுப்பி இருக்கும் தமிழ்ச்செல்வனின் அடித்தளம் அவரது கடும் உழைப்பால் அமைக்கப்பட்டது.

" எங்கு இருந்து ஆரம்பிக்கிறோம் என்பது முக்கியம் அல்ல, எங்கு இருந்தும் ஆரம்பித்து எந்த உயரமும் செல்ல முடியும் என்பது தான் சேலம் RR பிரியாணி தமிழ்ச்செல்வன் அவர்கள் நமக்கு உணர்த்தும் தொழில் பாடம் "