• India
```

வெறும் 10000 ரூபாயில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம்...இன்று கோடிகளில் வருமானம்...சக்தி மசாலாவின் சக்ஸஸ் ஸ்டோரி...!

Sakthi Masala Success Story

By Ramesh

Published on:  2024-11-28 15:55:49  |    507

Sakthi Masala Success Story - இன்று உலகளாவிய அளவில் மசாலாக்களின் முன்னனி நிறுவனமாக செயல்பட்டு வரும் சக்தி மசாலாவின் சக்ஸஸ் ஸ்டோரி குறித்து இங்கு பார்க்கலாம்.

Sakthi Masala Success Story - எல்லா தொழில்களுமே ஆரம்பக் காலட்டத்திலேயே கோடிகளில் முதலீடு செய்து கோடிகளில் சம்பாதித்து விடவில்லை, இன்றைய தொழிலதிபர்களில் பலரும் ஜீரோவில் துவங்கியவர்கள், சக்தி மசாலாவின் நிறுவனர் துரை சாமி அவர்களும் அப்படித் தான், ஆரம்பக் காலட்டத்தில் மஞ்சளை வைத்து வர்த்தகம் புரிந்து வந்தார், அதற்கு பின்னர் கையில் வந்த கொஞ்சம் இலாபத்தை வைத்து ஒரு குடிசைத் தொழில் துவங்கினார்.

கையில் பெரிய இடம் இல்லை, கையில் பெரிய முதலீடும் இல்லை, ஆனால் துரைசாமி அவர்களிடம் ஒன்றே ஒன்று மட்டும் இருந்தது, அது தான் தன்னம்பிக்கை, தான் துவங்கும் தொழில் மீதான நம்பிக்கை, வெறும் 300 சதுர அடியில், ரூ 10,000 முதலீட்டில் தான் துரைசாமி தன் தொழிலை துவங்கினார், தானே களத்தில் இறங்கி நாள் ஒன்றுக்கு கிட்டதட்ட 17 மணி நேரம் கடுமையான உழைப்பை வெளிப்படுத்தினார்.



அதன் விளைவு, அன்று 10,000 ரூபாயில் ஆரம்பிக்கப்பட்ட மசாலா தொழில் இன்று உலகளாவிய அளவில் மிகப்பெரிய மார்க்கெட்டைக் கொண்டு இயங்கி வருகிறது, 70 க்கும் மேற்பட்ட மசாலாக்கள், ஊறுகாய், எண்ணெய் என பல தயாரிப்புகளில் ஈடுபட்டு வரும் சக்தி மசாலா நிறுவனத்தின் வருமானம் ஆனது இன்று கோடிகளில் சென்று கொண்டு இருக்கிறது.

சக்தி தேவி என்ற பெயரில், ஒரு அறக்கட்டளையும் நிறுவி இருக்கின்றனர், அதன் மூலம் மக்களுக்கும் , சக்தி மசாலா ஊழியர்களுக்கும் ஒரு சில அத்தியாவசிய தேவைகளை இலவசமாக வழங்கி வருகின்றன, முக்கியமாக சக்தி மருத்துவமனை மூலம் பொது மக்களுக்கும், சக்தி நிறுவன ஊழியர்களுக்கும் மருத்துவம் இந்த அறக்கட்டளையின் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது, 

" ஜீரோவில் இருக்கிறோம் என நினைத்துக் கொண்டே இருக்கும் தொழில் முனைவோர்களுக்கு, சக்தி நிறுவனர் துரைசாமியின் வெற்றிக்கதை நிச்சயம் ஒரு உந்துதலாக இருக்கும் "