Red Bus Success Story - ரெட் பஸ் என்ற சிறிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தை எப்படி பானிந்திரா ஷர்மா 850 கோடி சாம்ராஜ்யமாக உருவாக்கினார் என்பது குறித்து பார்க்கலாம்.
பானிந்திரா ஷாமா, 2005 அது தீபாவளி சமயம், அலுவலகத்தில் பிசியான வேலை, ஆனாலும் குடும்பத்தோடு தீபாவளி கொண்டாட வேண்டும் என்ற ஆசையும் மனதுக்குள் ஓடிக் கொண்டே இருந்து இருக்கிறது, அன்று அனைவரும் லீவ் எடுத்து சென்று விட்டதால் வேலை குவிந்து கிடக்கவே அனைத்தையும் முடித்து விட்டு நடு இரவில் தான் பஸ் ஸ்டாண்டை நோக்கி ஷாமா ஓடி இருக்கிறார்.
எந்த பஸ் ஏஜென்சியிலும் டிக்கெட் இல்லை, அங்கும் இங்குமாக இரவு முழுக்க ஷாமா பஸ்சுக்காக ஓடிக் கொண்டே இருந்து இருக்கிறார், அந்த இரவு அவரை மிகவும் நிலை குலைய செய்தது, ஒரு வழியாக அவர் வீடு தேடி சென்று இருந்தாலும் அந்த நாள் முழுக்க அவர் பஸ்சுக்காக அலைக்களிக்கப்பட்டதை மனதில் யோசித்துக் கொண்டே இருந்தார்.
ஒரு வேளை நம்மால் அலுவலகத்தில் இருந்தே டிக்கெட் புக் பண்ண முடிந்து இருந்தால், நாம் எந்த பிரச்சினையும் இல்லாமல் பஸ்சை பிடித்து சென்று இருக்கலாம் அல்லவா என்று அவருக்குள் எழுந்த எண்ணத்தை அவர் அப்படியே இந்த சமூகத்தில் பிரதிபலிக்க நினைத்தார், அவ்வாறாக உருவானது தான் இந்த ரெட் பஸ் என்னும் மிகப்பெரிய புக்கிங் பிளாட்பார்ம்.
முதலில் ரெட் பஸ் ஒரு 3 பேரை மட்டும் நம்பி இயங்கிய சிறிய ஸ்டார்ட் அப் கம்பெனியாக தான் இருந்தது, ஆனால் குறுகிய காலத்திலேயே 50 பேர் கொண்ட குழுவாக விரிவடைந்தது, 2013 யில் IBIBO நிறுவனம் ஷாமாவிட்டம் இருந்து 2 கோடிக்கு ரெட்பஸ்சை விலைக்கு வாங்கியது, ஷாமா அதற்கு பின்பு தெலுங்கானாவின் தலைமை இண்னோவேசன் அதிகாரியாக பெறுப்பேற்றார்.