Ramraj Cotton Success Story - பிரபல ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் வெற்றிப் பயணம் குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.
Ramraj Cotton Success Story - ராம்ராஜ்
காட்டன் நிறுவனம் என்பது ஒன்றும் ஆரம்பத்திலேயே கோடிகளில் புரண்ட நிறுவனம் அல்ல, அன்று அவர்கள் ஆரம்பிக்கும் போது ஒரு மேஜை, ஒரு நாற்காலி இவ்வளவு தான் அவர்களின் நிறுவனத்தின் சொத்து, நலிந்த நெசவாளர்களுக்கும், மெலிந்து கொண்டே செல்லும் நெசவு தொழிலுக்கும் ஊக்கம் கொடுக்கும் வகையில் அவர்களிடம் இருந்து காட்டன் வேஸ்டிகளை வாங்கி விற்க ஆரம்பித்தனர்.
திருப்பூரில்
ராம்ராஜ் காடி டிரேடர்ஸ் என்ற பெயரில் 1983 யில் செயல்பட்ட போது அவர்களுக்கு இருந்தது அந்த ஒரு கிளை மட்டும் தான், தரமான நெசவாளர்களை தேர்ந்து எடுத்து, தரமான காட்டன்களை பயன்படுத்தி, தரமான வேஸ்டிகளை தயார் செய்வது தான் ராம்ராஜ் நிறுவனத்தின் முழுமையான நோக்கம் ஆக இருந்தது, அவர்களின்
அந்த தர நோக்கம் தான்
அவர்களை உயர்த்தியது என்றே சொல்ல வேண்டும்.
ஓரு காலத்தில் வேஸ்டி என்பது அந்த அளவிற்கு பெரிய மதிப்பாக பார்க்கப்படவில்லை, ஆனால் அந்த வேஸ்டி என்பது தென் தமிழகத்தின் ஒரு பாரம்பரிய ஆடையாக இருந்து வந்தது, ஆனால் அந்த வேஸ்டிக்கும் சர்வதேச அளவில் ஒரு அங்கீகாரம் இப்போது கிடைத்து இருக்கிறது என்றால் அந்த பெருமை முழுக்க முழுக்க ராம்ராஜ் நிறுவனத்தின் நிறுவனர் ஆன கே ஆர் நாகராஜ் அவர்களையே சாரும்,
அன்று ஒரு மேஜை, ஒரு நாற்காலி, ஒரே ஒரு நிறுவனத்தில் துவங்கிய ராம்ராஜ் நிறுவனம், இன்று தேசம் முழுக்க 250 சொந்த கடைகள், ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளில் ராம்ராஜ் விற்பனை மையங்கள், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் நிறுவனத்தின் வளர்ச்சி, பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி என வெற்றிப்பதையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.