• India
```

Rameswaram Cafe | இந்த ஹோட்டல்லாம் வேலைக்கு ஆகாது...சவால் விட்ட ஆசிரியர்...சாதித்துக் காட்டிய திவ்யா...!

Rameshwaram Cafe History

By Ramesh

Published on:  2025-01-17 07:59:11  |    33

Rameshwaram Cafe History - பொதுவாக திவ்யா ஒரு மிடில் கிளாஸ் குடும்பம், எப்படியோ தட்டு தடுமாறி படித்து CA வரைக்கும் சென்று விட்டார், ஒரு முறை அவரது கல்லூரி ஆசிரியர் ஒருவர் திவ்யாவிடம், என்ன தான் கடுமையாக உழைத்தாலும் தரப்படுத்தினாலும் என்றும் இந்திய உணவுகள் ஆனது KFC, McDonald போன்ற சர்வதேச நிறுவனங்களை எட்டவே முடியாது என சவால் விடும் தோணியில் பேசி இருக்கிறார்.

இது திவ்யாவின் இதயத்தை பிழிந்து கொண்டே இருந்திருக்கிறது, என்றாவது ஒரு நாள் நாம் நம் ஆசிரியர் சொன்ன கூற்றை உடைத்துக் காட்ட வேண்டும் என யோசித்துக் கொண்டே இருந்திருக்கிறார், திருமணமும் ஆனது, அந்த ஆசிரியரின் கூற்றை உடைத்துக் காட்ட முதலில் ஒரே ஒரு ஹோட்டலை திறக்கிறார், தரம், சுவையில் குறை வைக்காமல் வாடிக்கையாளர்களை அணுகவும் ஹோட்டல் பிரபலம் ஆகிறது,



என்ன தான் திவ்யா ராவ் பெங்களூருவை சேர்ந்தவராக இருந்தாலும் கூட, அவருக்கும் அவரது கணவர் ராகவேந்திரா ராவிற்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீதும், அவர் பிறந்த ராமேஸ்வரத்தின் மீதும் அளப்பரிய பற்று உண்டு, அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் தான் அவர்களது ஹோட்டலை ராமேஸ்வரம் கஃபே என பெயர் மாற்றம் செய்து இருக்கின்றனர்.

நாளடவைவில் தென் இந்தியாவின் பல பகுதிகளில் ராமேஸ்வரம் கஃபே பரவியது, தற்போது துபாய், அமெரிக்காவிலும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது, இன்னும் பல நாடுகளில் தென் இந்திய மக்களின் சுவையை KFC, McDonald க்கு நிகராக கொண்டு செல்வதை திவ்யாவும் அவரது கணவர் ராகவேந்திரா ராவும் நோக்கமாக கொண்டு இருக்கின்றனர்,

" தற்போதைக்கு மாதத்திற்கு 5 கோடிக்கு மேல் ராமேஸ்வரம் கஃபே வருமானம் ஈட்டி வருகிறது, வருடத்திற்கு என்று பார்த்தால் ராமேஸ்வரம் கஃபேவின் வருமானம் 50 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது "