Oyo Success Story - ஒடிசாவை சேந்தவர் ரித்தீஷ் அகர்வால், படிப்பில் ஓரளவிற்கு ஆர்வம் இருந்தாலும் கூட அதை விட இவருக்கு ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அதை விட அதிகமாக இருந்தது, தனது கல்லூரி படிப்பை தனது தொழில் ஆசைக்காக பாதியிலேயே விட்டார், ஏதாவது தொழில் செய்து முன்னேறி ஆக வேண்டும் என்ற எண்ணத்திற்கு தினம் தினம் தீனி போட்டுக் கொண்டு இருந்தார்.
தியல் பெல்லோஷிப் என்ற ஒரு திட்டம் அப்போது உண்டு, அதாவது இத்திட்டத்தின் கீழ் இணைய ஒருவர் கல்லூரி முடித்திருக்க கூடாது, ஏதாவது தொழில் முனைவ வேண்டும் என்ற வலிமையான எண்ணம் இருக்க வேண்டும், அந்த ஐடியாவும் நிறைவேற்றத் தக்கதாகவும், இலாபகரமானதாகவும் இருக்கும், அவ்வாறு இருக்கும் பட்சத்தில் நேர்முக தேர்வின் மூலம் இந்த தியல் பெல்லோஷிப்பிற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.
அவர்களுக்கு சரியாக இரண்டு வருடம் 1 இலட்சம் அமெரிக்க டாலர்கள் அவர்களது அந்த ஐடியாவிற்காக கொடுக்கப்படும், அந்த பெல்லோஷிப்பிற்கு ரித்தீஷ் அகர்வால் 2013 ஆம் ஆண்டு தேர்ந்து எடுக்கப்படுகிறார், அந்த பெல்லோஷிப் மூலம் கிடைத்த பணத்தை தனது தொழில் மூலதனத்திற்கு பயன்படுத்த முடிவெடுக்கிறார். ரித்தீஷ்சின் ஐடியா என்பது எளிமையானது தான்.
ஒரு ஊரில் இருந்து வேறு ஒரு ஊருக்கு பயணிப்பவர், அங்கு சென்று தான் தங்க போகும் இடத்தை தேர்வு செய்வதில் சரியான திட்டமிடல் இருக்காது, இதனால் புதிய ஊருக்கு செல்பவர்கள், அங்கு தங்கும் இடத்திற்காக அங்கும் இங்கும் அலைய வேண்டி இருக்கும், அதை எளிமையாக்கியது தான் இந்த ரித்தீஷ் அகர்வாலின் OYO (On Your Own), இந்த செயலியின் மூலம் ஒரு பயணி முன்னதாகவே தான் செல்லும் இடத்தில், தங்கும் இடத்தை தேர்ந்து எடுத்துக் கொள்ள முடியும்,
" முதலில் குருகிராமில் மட்டும் ஆரம்பிக்கப்பட்ட இந்த Oyo நாளடைவில் தேசம் எங்கும் விரிவடைந்தது, வெறும் 86 இலட்சத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த Oyo இன்று, 8,751 கோடி நிகர சொத்தாக விரிவடைந்து இருக்கிறது, இன்று உலகின் இளம் பில்லியனராக ரித்திஷ் அகர்வால் உயர்ந்து இருக்கிறார், ஐடியாவும் அதன் மீதான தெளிவான பார்வையும் இருந்தால் பில்லியனர்கள் ஆக வயது தடையில்லை என்பதற்கு ரித்தீஷ் சான்று "