The Rajni Bector Inspirational Story - பிரபல பெண் தொழில் முனைவோர் ரஜினி பெக்டர் உருவாக்கிய தொழில் சாம்ராஜ்யம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
The Rajni Bector Inspirational Story - ரஜினி பெக்டர் அவருக்கு அப்போது வயது 17 இருக்கும், வாழ்க்கை என்ன என்று யோசிப்பதற்குள் திருமணம் முடிந்து விட்டது, படிப்பு பாதியிலேயே நின்று விட்டது, சரி என்று திருமண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்த ரஜினி பெக்டர் வீட்டிலேயே ஐஸ்க்ரீம், கேக் என்று செய்து அசத்தி இருக்கிறார், சில பண்டிகை காலங்களில் அருகில் இருப்பவர்களுக்கும் தான் செய்ததை பகிர அவர்களுக்கும் அது பிடித்து போகிறது.
அவ்வாறாக ஆரம்பித்தது தான் ரஜினி பெக்டரின் தொழில் பயணம், அவரது தயாரிப்பு மீதான ஆர்வத்தை பார்த்த கணவர் முதலில் அவரது சமையலறையில் 300 ரூபாய் மதிப்பு மிக்க ஒரு ஓவனை சேர்க்கிறார், அந்த ஓவன் வந்த பின்னர் ரஜினி பெக்டரின் சமையல் ஆர்வம் இன்னும் கூடியது, அருகில் இருக்கும் வீட்டார்களிடம் இருந்தெல்லாம் ஆர்டர் வர ஆரம்பிக்கிறது,
வைபவங்களுக்கும் கேக், ஐஸ்க்ரீம் உள்ளிட்டவைகளை ரஜினி பெக்டர் வீட்டில் இருந்தே செய்து கொடுத்தார், அவரது சமையல் ஆர்வத்தை பார்த்த அவரது கணவர் அவரது கைகளில் ஒரு 20,000 ரூபாயை கொடுத்து தொழில் துவங்க ஒரு பாதையை அமைத்துக் கொடுக்கிறார், அதை இறுகப்பற்றிக் கொண்ட ரஜினி பெக்டர் பஞ்சாப் லூதியானைவை மையமாக கொண்டு ஒரு நிறுவனத்தை 1977 ஆம் ஆண்டு தோற்றுவிக்கிறார்,
Mrs Bector's Cremica என்ற பெயரில் பிஸ்கட், குக்கீஸ், க்ரீம்ஸ், ஐஸ்க்ரீம்ஸ், க்ளுக்கோஸ் உள்ளிட்டவைகளை தயாரித்து சந்தைப்படுத்தினார், இவர்களது தயாரிப்புகளுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்தது, KFC, McDonald உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் எல்லாம் இவரது தயாரிப்பை விரும்பி வாங்கின, இன்று 60 நாடுகளில் இவரது தயாரிப்புகள் கொடிகட்டி பறக்கிறது.
" இன்று 6000 கோடி சாம்ராஜ்யத்தை தாங்கி பிடித்துக் கொண்டு இருக்கும் Mrs Bector's Cremica, கடந்த நிதி ஆண்டில் மட்டும் 1,623 கோடி வருமானம் ஈட்டி இருக்கிறது, தொடர்ந்து 40 வருடங்களுக்கு மேலாக நிலையான இலாபத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது "